மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும், அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக ஏப்ரல் 11 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதில் 17 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 91 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல ஆந்திரா, அருணாசலப்பிரதேசம், சிக்கிம் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
அதற்க்கான முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைந்தது. இன்று கடைசி நாள் என்பதால் பல அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு தங்கள் கட்சிக்கு வாக்கு சேகரித்தனர்.
முதற்கட்ட மக்களவை தேர்தலுக்கும், மூன்று மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கும் வேட்புமனுத் தாக்கல் மார்ச் 18 ஆம் தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. இறுதி வேட்பாளர் பட்டியலை மார்ச் 28 ஆம் தேதி அறிவிக்ப்பட்டது.
முதல் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்:-
பீகார் - 4
அசாம் - 5
ஒடிசா - 4
சிக்கிம் - 1
திரிபுரா - 1
காஷ்மீர் - 2
ஆந்திரா - 25
மணிப்பூர் - 1
மிசோராம் - 1
சட்டீஸ்கர் - 1
மேகாலயா - 2
நாகாலாந்து - 1
மகாராஷ்ட்ரா - 7
தெலங்கானா - 17
மேற்கு வங்கம் - 2
உத்தரபிரதேசம் - 5
அருணாச்சல் பிரதேசம்- 2