கொல்கத்தாவில் இராணுவ மருத்துவர் கொரோனா வைரஸ்-க்கு பாதிக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!!
இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 1,024 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்ட்ராவில் 186 பேரும், கேரளாவில் 182 பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது என சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. தமிழக்ததில் இதுவரை 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 4 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மக்கள் முழுமையாக பின்பற்றுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், பிற மாநில தொழிலாளர்கள், மாணவர்களை விடுதியிலிருந்து வெளியேற்றுவோர் மீதும் நடவடிக்கை தேவை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள ராணுவ கட்டளை மருத்துவமனையில் கோவிட் -19 க்கு அகோலோனல் தர மருத்துவர் பரிசோதனை செய்துள்ளதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளன. அந்த அதிகாரி சமீபத்தில் புதுதில்லியில் இருந்தார். அந்த அதிகாரி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேலும் அவரது சகாக்களுக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.