பாராமுல்லா மாவட்ட வடக்கு காஷ்மீரின் பயங்கரவாதிகள் அதிகம் நடமாட்டமுள்ள பகுதிகளில் ராணுவம், பிஸஎப் ராணுவ படை, சிஆர்பிஎப் படை, மற்றும் போலீசார் ஆகியோர் இணைந்து தேடுதலில் ஈடுபட்டனர்.
ஐ.நா., சபை பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் எதிர் பார்த்ததை போல காஷ்மீர் பிரச்னையை பற்றி பேசினார்.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஐ.நா., சபை பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
பயங்கரவாதத்தால் பாகிஸ்தானும் நிறைய பாதிக்கப்பட்டுள்ளது. சில வெளிநாடுகள் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி, ஆயுத உதவி அளிக்கின்றன.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி பர்ஹான் வானி கடந்த ஜூலை 9-ம் தேதி பாதுகாப்பு படையால் கொல்லப்பட்டதை கண்டித்து அங்கு போராட்டம் நடைபெற்றது. தொடர் போராட்டங்கள் மற்றும் வன்முறையால் 50-நாட்களுக்கும் மேலாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
இந்நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பதற்றம் தணிந்திருப்பதால் புல்வமா மாவட்டத்திலும் ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டது. ஸ்ரீநகரில் உள்ள நவ்ஹட்டா, மற்றும் குன்ஜ் ஆகிய பகுதிகளை தவிர்த்து ஏனைய இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.
காஷ்மீரில் பார்கான் வானி ஏரியாவில் செல்போன் டவரில் ஏற்றப்பட்டிருந்த பாகிஸ்தான் கொடியை அகற்றிய ராணுவ வீரர் இந்திய தேசிய கொடியை பறக்கச் செய்தார்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி பர்கான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து வன்முறை நீடித்து வருகிறது. வன்முறையில் இதுவரைக்கும் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.
காஷ்மீரில் கடந்த மாதம் 8-ம் தேதி ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. அவரது ஆதரவாளர்கள் அரங்கேற்றிய வன்முறையில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 5000-த்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காஷ்மீரில் தொடர்ந்து போராட்டம் நடைபெறுவதால் போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து ஜம்மு -காஷ்மீரில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்ட வன்முறையில் இதுவரை 50- க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் பல்வேறு மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு 34-வது நாளாக இன்றும் நீடிக்கும் நிலையில், இதுவரைக்கும் வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை
56-ஆக உயர்ந்துள்ளது. காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி புர்கான் வானி கடந்த மாதம் 9-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டதிலிருந்து அங்கு வன்முறைகள் அரங்கேறி வருகின்றன.
இதன் காரணமாக அப்பகுதியில் முற்றிலுமாக சாலை போக்குவரத்து முடங்கியுள்ளது. மேலும் இதனால் அங்கு வசிக்கும் கூலித்தொழிலாளிகள் தங்கள் வாழ்வதாரத்தை இழந்துள்ளனர்.
காஷ்மீரில் நாங்கள்தான் வன்முறையை தூண்டிவிட்டோம் என்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கூறி உள்ளான்.
பர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெற்ற ஊர்வலத்திற்கு தலைமை தாங்கியது லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியே என்று பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கூறி உள்ளதாக இந்தியா டுடே செய்திவெளியிட்டு உள்ளது.
சமீபத்தில் காஷ்மீரில் நடத்த என்கவுன்டரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி பர்ஹன் வானி சுட்டுக் கொல்லப்பட்டான். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போலீசாருக்கு எதிராக போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
பர்ஹான் வானி இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர், பாதுகாப்பு படையினரின் கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். இதனால் காஷ்மீரில் பதற்றம் ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகீதின் பயங்கரவாதி பர்ஹான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட வன்முறையை ஐ.நாவிடம் எடுத்துச்சென்ற பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ள இந்தியா, தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் விளங்குகிறது என்று குற்றம் சாட்டியுள்ளது.
காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்கான் வானி மீடியாக்களில் ஹீரோ போல் சித்தரிக்கப்படுவது குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். காஷ்மீர் கலவரம் குறித்து பிரதமர் மோடி நேற்று மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி பர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்தபோது போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினரின் ஆயுதங்களை பறித்தனர் என்று தெரியவந்து உள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் குல்காமில் தாம்கால் காஞ்ச் போராவில் உள்ள போலீஸ் நிலையத்தில் போராட்டக்காரர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட போது தானியங்கி துப்பாக்கிகள் உள்பட 70 துப்பாக்கிகளை எடுத்து சென்றுவிட்டனர் என்று தகவல்கள் தெரிவித்து உள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டு உள்ளது.
காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி–பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மெகபூபா முப்தி முதல்–மந்திரியாக பதவி வகிக்கிறார். அந்த மாநிலத்தில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி பர்கான் வானியும், அவரது கூட்டாளிகள் இரண்டு பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் வாகனம் மீது தீ வைக்க முயன்ற கும்பலை விரட்டியடிக்க வானை நோக்கி பாதுகாப்பு படையினர் பல முறை துப்பாக்கியால் சுட்டனர். தெற்கு காஷ்மீரின் கோகர்நாக் பகுதியில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பின் முக்கிய தளபதி புர்ஹான் வானி நேற்று கொல்லப்பட்டார். அவருடன் வேறு 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில், ஹிஸ்புல் முஜாகீதின் இயக்க தளபதி பர்ஹான் முசாபர் வானி உட்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதி குழுக்களில் ஒன்றான ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவனாக திகழ்ந்தவன் புர்ஹான் வானி. சமீபத்தில் இவன் சமூக வலைத்தளங்கள் மூலம் ஒரு மிரட்டல் வீடியோவை வெளியிட்டான். அதில் அவன், “காஷ்மீரில் பண்டிட்டுக்களுக்கு என்று தனி குடியிருப்பு அமைக்கக்கூடாது. மீறி அமைத்தால் அந்த குடியிருப்புகளை அழிப்போம்” என்று மிரட்டல் விடுத்திருந்தான்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.