ராணுவத்தின் பொறியல் துறையைச் சேர்ந்த மேஜர் தலைமையில் கண்ணிவெடியை செயலிழக்க செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக கண்ணி வெடி வெடித்ததில், ராணுவ மேஜர் பலி!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் பயங்கரவாதிகளின் குண்டுக்கு ராணுவ அதிகாரி ஒருவர் பலியாகி உள்ளார். அந்த மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு அருகில் உள்ள நவ்சோரவில் இந்திய ராணுவ மேஜர் ஒருவர் தலைமையில் ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கண்ணி வெடி இருப்பது கண்டு அறியப்பட்டது.
இதையடுத்து ராணுவத்தின் பொறியல் துறையைச் சேர்ந்த மேஜர் தலைமையில் கண்ணிவெடியை செயலிழக்க செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக கண்ணி வெடி வெடித்ததில், ராணுவ மேஜர் உயிரிழந்தார். மேலும் சிலர் காயமடைந்தனர். கண்ணி வெடியை புதைத்து வைத்த பயங்கரவாதிகளை தேடும் பணியை ராணுவம் முடுக்கி விட்டுள்ளது.
The Major-rank army officer was killed while defusing an Improvised Explosive Device (IED) which had been planted by terrorists. The officer is from the Corps of Engineers. The IED was planted 1.5 kms inside the Line of Control in the Naushera sector, Rajouri district, in J&K https://t.co/ZyWFS9RbWR
— ANI (@ANI) February 16, 2019