ராணுவத்தேர்வு வினாத்தாள் வெளி செய்தவர்கள் கைது!!

Last Updated : Feb 26, 2017, 11:50 AM IST
ராணுவத்தேர்வு வினாத்தாள் வெளி செய்தவர்கள் கைது!! title=

இன்று நடைபெறும் இந்திய ராணுவ பணியாளர் தேர்வுக்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்னரே வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தானே குற்றப்பிரிவு காவல்துறையினர் ராணுவ தேர்வு வினாத்தாள் வெளியாகியுள்ளது என்ற தகவல் கிடைத்ததை அடுத்து நேற்று இரவு நாடு முழுவதும் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர், புனே, நாசிக் மற்றும் கோவா ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது நடத்திய விசாரணையில் மாணவர்கள் 2,00,000 ரூபாய் கொடுத்து வினாத்தாளை வாங்கி, லாட்ஜில் அதற்கான விடைகளை எழுதியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சுமார் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராணுவ பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடைபெறும் நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள 9 தேர்வு மையங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Trending News