நிதியமைச்சகத்தில் மீண்டும் நிதித்துறை அமைச்சராய் அருண் ஜெட்லி...!

உடல்நலம் சரியானதையடுத்து மீண்டும் மத்திய நிதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார் அருண் ஜெட்லி...! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 23, 2018, 12:39 PM IST
நிதியமைச்சகத்தில் மீண்டும் நிதித்துறை அமைச்சராய் அருண் ஜெட்லி...!  title=

உடல்நலம் சரியானதையடுத்து மீண்டும் மத்திய நிதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார் அருண் ஜெட்லி...! 

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ததால் தற்காலிக ஓய்வில் இருந்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு மீண்டும் நிதித்துறை, கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சராக இன்று பொறுப்பு ஏற்கிறார். 

மத்திய நிதி மந்திரியாக இருந்த அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் தற்காலிகமாக சில மாதங்கள் ஓய்வெடுத்தார். எனவே, அருண் ஜெட்லி வசம் இருந்த நிதித்துறை மற்றும் கம்பெனிகள் விவகாரத்துறை கூடுதல் பொறுப்பாக மத்திய மந்திரி பியூஸ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது சிகிச்சை முடிந்து அருண் ஜெட்லி உடல்நலம் தேறியதை அடுத்து, நிதித்துறை மற்றும் கம்பெனிகள் விவகாரத்துறை மீண்டும் அருண் ஜெட்லியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.

 

Trending News