16 February 2020, 12:38 PM
தேர்தல்கள் முடிந்துவிட்டன, நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பது முக்கியமல்ல, இப்போது டெல்லி மக்கள் அனைவரும் எனது குடும்பம். எந்தவொரு கட்சியிலிருந்தும், எந்த மதத்திலிருந்தும், சாதியினரிடமிருந்தோ அல்லது சமூகத்தின் அடுக்குகளிலிருந்தோ நான் அனைவருக்கும் வேலை செய்வேன்.
16 February 2020, 12:35 PM
இது எனது வெற்றி அல்ல, இது ஒவ்வொரு டெல்லியினதும், ஒவ்வொரு குடும்பத்தினதும் வெற்றி. கடந்த 5 ஆண்டுகளில், ஒவ்வொரு டெல்லி மக்களுக்கும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தருவதே எங்கள் ஒரே முயற்சி.
#WATCH Arvind Kejriwal takes oath as Chief Minister of Delhi for a third term pic.twitter.com/C66e3cgxXw
— ANI (@ANI) February 16, 2020
16 February 2020, 12:20 PM
டெல்லி முதல்வராக 3ஆவது முறையாக பதவியேற்றார் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்!
Arvind Kejriwal takes oath as Delhi Chief Minister
Read @ANI Story| https://t.co/mIS5BoxaC8 pic.twitter.com/yk6EF1YSB3
— ANI Digital (@ani_digital) February 16, 2020
16 February 2020, 12:10 PM
டெல்லி அரசாங்கத்தில் அமைச்சர்களாக கோபால் ராய், கைலாஷ் கஹ்லோட் மற்றும் இம்ரான் உசேன் ஆகியோர் பதவியேற்கின்றனர்
16 February 2020, 12:00 PM
3ஆவது முறையாக தலைநகர் டெல்லி முதல்வராக இன்னும் சற்று நேரத்தில் பதவியேற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!
16 February 2020, 11:50 AM
அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிற ஆம் ஆத்மி கட்சி தலைவர்களின் பதவியேற்பு விழாவிற்கு டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் ராம்லீலா மைதானத்திற்கு வருகிறார்.
டெல்லி முதலமைச்சராக இன்று மூன்றாவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் தனது கேபினட் அந்தஸ்துடைய 6 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்!!
நடைபெற்று முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 இடங்களில் 62 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இத்தேர்தலில் பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக இன்று பிற்பகல் பதவியேற்க உள்ளார். ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவுக்காக பலத்த பாதுகாப்புடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஆசிரியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளிட்டோர் இவ்விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் முக்கிய பிரமுகர்களில், பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டும், அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக நேற்றிரவு தம்முடன் பதவியேற்க உள்ள 6 கேபினட் அமைச்சர்களுக்கு கெஜ்ரிவால் விருந்தளித்தார். அப்போது டெல்லியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்திய அவர் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளுடன் மக்களுக்கு அளித்துள்ள பத்து முக்கிய உத்தரவாதங்களை நிறைவேற்ற அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளவர்களிடம் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிது.
டெல்லியின் மாசு நிலையைப் போக்க இரண்டு கோடி மரங்களுக்கான விதைகளை நட தயார் செய்வது, யமுனை நதியை தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து அமைச்சர்களுடன் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார். டெல்லியை சர்வதேச தரத்துடன் கூடிய நகரமாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.