இந்தியா திராவிடர்களுக்கும், ஆதிவாசிகளுக்குமே சொந்தம்; ஒவைசி பேச்சு

இந்தியா யாருக்கேனும் சொந்தமானது என்றால் அது திராவிடர்களுக்கும்,  ஆதிவாசிகளுக்கும் தான் என ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

Written by - Chithira Rekha | Last Updated : May 29, 2022, 01:11 PM IST
  • திராவிடர்களுக்கும், ஆதிவாசிகளுக்கும் தான் இந்தியா சொந்தம்
  • ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி பேச்சு
  • சரத் பவார் மீது கடுமையான சாடல்
இந்தியா திராவிடர்களுக்கும், ஆதிவாசிகளுக்குமே சொந்தம்; ஒவைசி பேச்சு title=

மகாராஷ்டிர மாநிலம், பிவாண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “இந்தியா என்னுடையதும் அல்ல, தாக்கரேக்களுடையதோ, மோடி-ஷாக்களுடையதோ அல்ல. இந்தியா யாருக்கும் சொந்தமானது என்றால் அது திராவிடர்களுக்கும், ஆதிவாசிகளுக்கும் தான் எனக் குறிப்பிட்டார். 

முகலாயர்களுக்குப் பிறகுதான் பாஜக - ஆர்எஸ்எஸ் உருவானது. ஆப்பிரிக்கா, ஈரான், மத்திய ஆசியா, கிழக்கு ஆசியாவில் இருந்து மக்கள் இடம் பெயர்ந்து வந்தபிறகே இந்தியா உருவானது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை கடுமையாக சாடிய ஒவைசி, சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்துக்காக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அவர், நவாப் மாலிக்கிற்காக ஏன் சந்திக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினார். 

மேலும் படிக்க | Monkeypox பரவல்; அரசு உயர் எச்சரிக்கை, புதிய அறிகுறிகள் இதுதான்

Owaisi Slams Sarath pawar

சஞ்சய் ராவத் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று வலியுறுத்துவதற்காக சரத் பவார் பிரதமர் மோடியை சந்திக்க செல்கிறார். நவாப் மாலிக்கிற்கு பவார் ஏன் அதை செய்யவில்லை?. சஞ்சய் ராவுத்தை விட நவாப் மாலிக் எவ்விதத்தில் குறைந்தவர்? அவர் ஒரு முஸ்லீம் என்பதனாலா? சஞ்சய் ராவத்தும், நவாப் மாலிக்கும் சமமில்லையா எனவும், ஓவைசி கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க | IPL 2022 Fiinal: இறுதிப் போட்டியில் பிரதமர் மற்றும் அமித் ஷா: ரஹ்மான் நிகழ்ச்சி

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News