Uric Acid Control: பியூரின் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதால், உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த நிலை ஹைப்பர்யூரிசிமியா என்று அழைக்கப்படுகிறது.
Uric Acid Control: சிறுநீரகங்களால் யூரிக் அமிலத்தை சரியாக வடிகட்ட முடியாமல் போனால், அது படிகங்கள் வடிவில் உடலின் மூட்டுகளில் குவியத் தொடங்குகிறது. இந்த கட்டிகள் கடுமையான வலியை ஏற்படுத்துகின்றன. இந்த பிரச்சனையில் சரியான நேரத்தில் கவனம் செலுத்தாமல் போனால் அது மூட்டுவலி மற்றும் சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும், இதனால் உயர் இரத்த அழுத்தம், இதய நோய், போன்றவையும் ஏற்படும். யூரிக் அமில அளவை குறைக்க உதவும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பல இயற்கையான வழிகளில், சில குறிப்பிட்ட உணவுகளை உட்கொள்வதன் மூலம் யூரிக் அமில அளவை குறைக்கலாம். யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைப்பதற்கு உதவும் சில பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
குறைந்த பியூரின் உணவுகள்: அதிக பியூரின் உணவுகள் யூரிக் அமில அளவை அதிகரிக்கும். ஆகையால், குறைந்த பியூரின் உள்ள உணவுகளையே உட்கொள்ள வேண்டும். காய்கறிகளில் கேப்சிகம், கேரட், வெள்ளரி போன்றவற்றில் பியூரின் குறைவாக உள்ளது. இவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
பழங்கள்: கிவி, வாழைப்பழம், நாவல் பழங்கள், ஆரஞ்சு போன்ற பழங்கள் யூரிக் அமில அளவை குறைக்க உதவுவதோடு உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள்: அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் யூரிக் அமில அளவைக் குறைக்க உதவியாக இருக்கும். நார்ச்சத்து இரத்த ஓட்டத்தில் இருந்து அதிகப்படியான யூரிக் அமிலத்தை நீக்குகிறது. நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள், முழு தானியங்கள், பழுப்பு அரிசி, பார்லி போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
இன்சுலின் அளவு: இன்சுலின் மற்றும் யூரிக் அமிலம் ஒன்றோடொன்று தொடர்புடையவை. உடலில் இன்சுலின் அதிகமானால், யூரிக் அமிலத்தின் அளவும் அதிகமாகின்றது. ஆகையால் இன்சுலின் அளவை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
எடை இழப்பு: யூரிக் அமில அளவை அதிகரிப்பை தூண்டும் பல விஷயங்களில் எடை அதிகரிப்பதும் ஒன்றாகும். அதிக எடை யூரிக் அமிலத்தின் அளவையும் அதிகரிக்கிறது. எடை அதிகரிக்கும் போது, கொழுப்பு நரம்புகள் மற்றும் தசை நரம்புகளின் செயல்பாடு பாதிக்கப்படும். இதனால் கொழுப்பு நரம்புகள் அதிக யூரிக் அமிலத்தை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கின்றன. மேலும் எடை அதிகரித்தால், சிறுநீரகம் யூரிக் அமிலத்தை சரியாக வடிகட்ட முடியாது. இருப்பினும், எடை குறையும் போது, இந்த பிரச்சினைகள் தானாகவே குறையத் தொடங்குகின்றன. எனவே, ஆரோக்கியமான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சீரான உணவு மூலம் உங்கள் எடையைக் கட்டுப்படுத்துவத் உமிக அவசியம்.
இனிப்புகளை தவிர்ப்பது நல்லது: பழச்சாறுகள், குளிர் பானங்கள், சோடா பானங்கள், ஷேக்ஸ், இனிப்புகள், சாக்லேட்கள் போன்றவற்றால் யூரிக் அமிலத்தின் அளவும் அதிகரிக்கிறது. இந்த செயற்கை இனிப்புகள் அனைத்தும் யூரிக் அமிலத்தைத் தூண்டுகின்றன. இவற்றுக்கு பதிலாக பழங்கள், மூலிகை தேநீர் மற்றும் இயற்கையான பானங்களை உட்கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.