பாபர் மசூதி வழக்கு: அத்வானியிடம் மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Last Updated : Apr 19, 2017, 11:12 AM IST
பாபர் மசூதி வழக்கு: அத்வானியிடம் மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு title=

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் இன்று சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து ரேபர்லி கோர்ட்டால் விடுவிக்கப்பட்டனர். அலகாபாத் ஐகோர்ட்டும் இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது. 

இந்நிலையில் பாஜக தலைவர்கள் விடுவிப்பை எதிர்த்து சிபிஐ சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது. இந்த முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க சிபிஐக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தினந்தோறும் விசாரணை நடத்தி 2 வருடங்களுக்குள் வழக்கு விசாரணையை நடத்தி முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கில் இருந்து கல்யாண் சிங் விடுவிக்கப்படுவதாகவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

Trending News