புது தில்லி: நீங்கள் ஆட்டோவில் அடிக்கடி பயணம் செய்யும் பழக்கம் உள்ளவரா? இந்த கொரோனா காலத்தில் தொற்று ஏற்படும் அச்சம் காரணமாக ஆட்டோ பயணத்தைக் கண்டு அஞ்சுகிறீர்களா? ஆம், என்றால் உங்கள் முகத்தில் இந்த செய்தி புன்னகையைக் கொண்டு வரும். உங்கள் ஆட்டோ பயணத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய Uber மற்றும் Bajaj Auto இணைந்து பல பணிகளை செய்து வருகின்றன.
புது தில்லி, குருகிராம், மும்பை, புனே, சென்னை, ஹைதராபாத், பெங்களூர், மைசூர், மதுரை உள்ளிட்ட 20 நகரங்களில் 1 லட்சம் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர்களுக்கு, முகக்கவசம், ஹேண்ட் சானிடைசர்கள் மற்றும் வாகன கிருமிநாசினிகளுடன் பாதுகாப்பு கருவிகள் விநியோகிக்கப்படும்.
"பஜாஜுடனான எங்கள் கூட்டாண்மை எங்கள் தளத்தை பயன்படுத்தும் அனைவரின் பாதுகாப்பிற்கான எங்கள் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது. வரவிருக்கும் சில மாதங்களில், எங்கள் ஓட்டுநர் கூட்டாளர்களிடையே தொடர்ந்து நம்பிக்கையை வளர்ப்பதற்கும், மில்லியன் கணக்கான எங்கள் பயணிகளுக்கு மன அமைதியை வழங்குவதற்கும் பஜாடுடனான எங்கள் நெருங்கிய உறவுகளை நாங்கள் பயன்படுத்துவோம்'' என்று Uber APAC, வணிக மேம்பாட்டு இயக்குநர் நந்தினி மகேஸ்வரி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கூடுதலாக, Uber அதன் தொழில்நுட்பத்தை Uber App மூலம் கட்டாய சிறப்பு பயிற்சி மாட்யூல்களாக ஓட்டுனர்களுக்கு வழங்குவது குறித்தும் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் PPE கொரோனா பாதுகாப்பு கிட்டுகளை சரியாக பயன்படுத்தும் முறைகள் மற்றும் வாகனங்களுக்கான சுத்திகரிப்பு நெறிமுறைகள் குறித்த பயிற்சி ஓட்டுனர்களுக்கு வழங்கப்படும்.
"வாகன அமைப்பைப் பொருட்படுத்தாமல் பாதுகாப்பு பகிர்வுகளை நிறுவுவதற்கும் கிருமி நீக்கம் செய்யும் கருவிகளை வழங்குவதற்கும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுனர்களை நாங்கள் சந்தித்து வருகிறோம்," என்று பஜாஜ் ஆட்டோவின் (Bajaj Auto) உள் நகர வணிகத்தின் தலைவர் சமர்தீப் சுபந்த் கூறினார்.
‘Go Online Checklist’ போன்ற விரிவான பாதுகாப்பு நடவடிக்கைத் தொகுப்பை Uber சமீபத்தில் துவக்கி வைத்தது. ஓட்டுனர்கள் மற்றும் பயணி என இருவருக்கும் கட்டாய முகக்கவசம், ஓட்டுனர்களுக்கு முன் பயண முகக்கவச சரிபார்ப்பு செல்ஃபி, கட்டாய ஓட்டுநர் கல்வி மற்றும் புதுப்பிக்கப்பட்ட ரத்து கொள்கை (Cancellation Policy) ஆகியவை இதில் அடங்கும். ஓட்டுனர்களோ பயணியோ பாதுகாப்பு ஏற்பாடுகளால் திருப்தி அடையவில்லை என்றால், அவர்கள் பயணத்தை ரத்து செய்து கொள்ளலாம்.
ALSO READ: சேலம், கோவை, திருச்சி மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா நோய் தொற்று
கொரோனா தொற்றின் அச்சத்தால் ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகளை பயன்படுத்த அச்சப்படும் மக்களுக்கு இந்த செய்தி ஒரு மிக நல்ல செய்தியாக வந்துள்ளது!!