Banks Merger: வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் இன்று போராட்டம்

வங்கிகள் இணைப்பு கண்டித்து வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்தப்போவதாக இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 31, 2019, 09:54 AM IST
Banks Merger: வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் இன்று போராட்டம் title=

புதுடெல்லி: நேற்று பொதுத்துறை வங்கிகள் இணைப்பு அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். இதனை கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் வங்கி மற்றும் யுனைட்டட் வங்கி ஒன்றாகவும், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகள் ஒன்றாகவும், கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கியும், இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அதாவது  4 பெரிய வங்கிகளுடன், 6 சிறிய வங்கிகள் இணைக்கப்படுகின்றன. இந்த இணைப்பு நடவடிக்கைக்குப் 27 வங்கியாக இருந்த பொதுத்துறை வங்கிகள் தற்போது 12 மட்டுமே இருக்கும். 

நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. மேலும் அந்தந்த வங்கி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அல்லது கருப்பு சட்டை அணிந்து, வங்கியின் முன் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். எங்களின் கோரிக்கையை மத்திய அரசு பரிசிலனை செய்யவில்லை என்றால், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இன்று மாலை ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

Trending News