பீம் இராணுவத் தலைவர், ஆதரவாளர்கள் ரவிதாஸ் கோயில் போராட்டத்தில் தடுத்து நிறுத்தம்!!

பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஆன்மீகவாதியும் சமூக சீர்திருத்தவாதியுமான குரு ரவிதாஸ் அவர்களின் நினைவாக எழுப்பப்பட்ட ஆலயம் டில்லியின் துக்ளாகாபாத் பகுதியில் அமைந்திருந்தது. அந்த ஆலயத்தை கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவின்படி டில்லி மேம்பாட்டு ஆணையம் இடித்து தள்ளியது.

Last Updated : Aug 22, 2019, 09:53 AM IST
பீம் இராணுவத் தலைவர், ஆதரவாளர்கள் ரவிதாஸ் கோயில் போராட்டத்தில் தடுத்து நிறுத்தம்!! title=

ரவிதாஸ் கோயில் இடிக்கப்படுவதற்கு எதிரான வன்முறை போராட்டத்திற்காக பீம் இராணுவத் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மற்றும் பலர் தடுத்து நிறுத்தம்!!

பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஆன்மீகவாதியும் சமூக சீர்திருத்தவாதியுமான குரு ரவிதாஸ் அவர்களின் நினைவாக எழுப்பப்பட்ட ஆலயம் டில்லியின் துக்ளாகாபாத் பகுதியில் அமைந்திருந்தது. அந்த ஆலயத்தை கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவின்படி டில்லி மேம்பாட்டு ஆணையம் இடித்து தள்ளியது.

இதற்கு தலித் மக்கள் மற்றும் பல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ரவிதாஸ் கோவில் இடிக்கப்பட்டதை எதிர்த்து தலித் மக்கள் டில்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தலித் மக்களின் போராட்டத்திற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோமணி அகாலிதளம் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.  இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரவிதாஸ் கோவில் இடிக்கப்பட்டதை எதிர்த்து பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியான உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான தலித் மக்கள் டில்லியில் இன்று  போராட்டம் நடத்தினர். டில்லியின் ஜாண்டேவாலம் பகுதி முதல் ராம்லீலா மைதானம் வரை போராட்டக்காரர்கள் கூடியிருந்தனர். டில்லி சமூக நீதித்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதன், பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மற்றும் ரவிதாஸ் சமூகத்தை சேர்ந்த பல ஆன்மீக தலைவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

ரவிதாஸ் கோயில் இடிக்கப்படுவதற்கு எதிரான போராட்டத்தின் போது வன்முறைக்காக பீம் ராணுவத் தலைவர் சந்திரசேகர் ஆசாத் தனது ஆதரவாளர்களுடன் டெல்லி போலீசாரால் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். "ரவிதாஸ் கோயில் இடிக்கும் பிரச்சினையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இன்று மாலை போலீசாருடன் மோதினர். இந்த சம்பவத்தில் சில போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். சில எதிர்ப்பாளர்கள் தடுத்து வைக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டுள்ளனர்" என்று DCP தென்கிழக்கு சின்மாய் பிஸ்வால் புதன்கிழமை தாமதமாக தெரிவித்தார்.

போராட்டத்தின் போது கோவில் இருந்த இடத்தை ரவிதாஸ் சமூகத்திடம் ஒப்படைக்க வேண்டும். மத்திய அரசு இடிக்கப்பட்ட கோவிலுக்கு பதிலாக புதிய கோவில் கட்டி கொடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ரவிதாஸ் கோவில் அரசுக்கு சொந்தமான வனப்பகுதியில் இருந்ததால் அதை இடிக்கும்படி உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு யாராலும் அரசியல் சாயம் பூச முடியாது என நேற்று நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் எம்.ஆர் ஷா அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Trending News