உ.பி. சட்டசபை தேர்தல் போட்டியிட மாட்டேன் - அதிர்ச்சி அளித்த அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ் தனது கவனத்தை முழுமையாக தேர்தலில் செலுத்த விரும்புவதாக தெரிகிறது. எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம் என அவர் கருதுகிறார். 

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 1, 2021, 01:44 PM IST
உ.பி. சட்டசபை தேர்தல் போட்டியிட மாட்டேன் - அதிர்ச்சி அளித்த அகிலேஷ் யாதவ் title=

லக்னோ: வரும் சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் அகிலேஷ் யாதவ் போட்டியிட மாட்டார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளான். இந்தத் தகவலை பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் எஸ்பி (Samajwadi Party) மற்றும் ஆர்எல்டி (Rashtriya Lok Dal) கூட்டணி குறித்து பேசப்பட்டு வருவதாகவும் அகிலேஷ் தெரிவித்ததாக PTI செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. 

பிடிஐக்கு அளித்த பேட்டியில், ஆர்எல்டி உடனான தொகுதிப் பங்கீடு இன்னும் முடிவாகவில்லை என்று அகிலேஷ் கூறியுள்ளார். அவரது மாமா ஷிவ்பால் யாதவின் (Shivpal Yadav) கட்சியான பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சியுடன் ( Samajwadi Party Lohia) தேர்தல் கூட்டணி குறித்து கேட்டபோது, ​​இந்த கூட்டணியில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று அகிலேஷ் யாதவ் கூறினார். தேர்தலில் PSPL தன்னுடன் வந்தால் அதற்கும் அதன் வேட்பாளர்களுக்கும் உரிய மரியாதை வழங்கப்படும் என்று அகிலேஷ் உறுதி அளித்துள்ளார். 

தேர்தலில் தனி கவனம் செலுத்த அகிலேஷ் விருப்பம்:
அகிலேஷ் யாதவ் தனது கவனத்தை முழுமையாக தேர்தலில் செலுத்த விரும்புவதாக தெரிகிறது. எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம் என அவர் கருதுகிறார். உத்தரப்பிரதேசத்தில் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியின் போட்டி பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக இருக்கும். வரவிருக்கும் தேர்தலுக்கான தனது தேர்தல் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் சமாஜ்வாதி கட்சி மும்முரமாக உள்ளது.

சிறிய கட்சிகளை ஒன்றிணைக்க SP விரும்புகிறது:
இம்முறை தேர்தலில் சிறு கட்சிகளை தன்னுடன் கொண்டு வர சமாஜ்வாதி கட்சி விரும்புகிறது. 2017 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிட்ட அவர் அந்தத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்தார். 2019 லோக்சபா தேர்தலில், அக்கட்சி பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது, ஆனால் இந்த கூட்டணி கூட பலனளிக்கவில்லை. பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து பலன் கிடைக்காததால், இம்முறை தேர்தலில் சிறிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட சமாஜ்வாதி கட்சி விரும்புகிறது.

தேர்தல் வாக்குறுதியை பாஜக நிறைவேற்றவில்லை:
சனிக்கிழமை பாஜகவைத் தாக்கிய SP தலைவர், காவி கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார். கடந்த விஸ்வாசம் தேர்தலில் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை என்று அகிலேஷ் கூறினார். அவர்கள் தங்கள் தேர்தல் அறிக்கையை மறந்துவிட்டார்கள். 2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று பாஜக கூறியது ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மாநில விவசாயிகள் இப்போது தங்கள் வருமானம் எப்போது இரட்டிப்பாகும் என்று கேட்கிறார்கள். கரும்பு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உ.பி அரசு பணம் வழங்கவில்லை என்றும் அகிலேஷ் குற்றம் சாட்டினார்.

அகிலேஷ் தற்போது ஆஜம்கர் எம்.பி.யாக (Azamgarh MP) உள்ளார். அதுமட்டுமில்லாமல் வரவிருக்கும் உ.பி., தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் முதல்வர் வேட்பாளராக உள்ளார். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News