Labour Laws: விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளன மோடி அரசின் தொழிலாளர் சீர்திருத்தங்கள்

ஊதியங்கள் குறித்த குறியீடு 2019 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மற்ற மூன்று குறியீடுகளும் 2020 இல் இரு அவைகளிடமிருந்தும் அனுமதி பெற்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 14, 2021, 01:22 PM IST
  • தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நான்கு தொழிலாளர் குறியீடுகளின் கீழ் விதிகளை இறுதி செய்துள்ளது.
  • ஊதியங்கள் குறித்த குறியீடு 2019 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
  • வரைவு விதிகளை அறிவிப்பதற்கும், செயல்படுத்துவதற்கும் முத்தரப்பு ஆலோசனைகளை மாநிலங்கள் நடத்தி வருகின்றன.
Labour Laws: விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளன மோடி அரசின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் title=

Labour Laws: தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நான்கு தொழிலாளர் குறியீடுகளின் கீழ் விதிகளை இறுதி செய்துள்ளது. இதன் மூலம் இந்த சீர்திருத்தங்கள் விரைவில் நடைமுறைபடுத்தப்படும். இவற்றை நடைமுறைபடுத்துவதற்கான அதிகாரங்கள் விரைவில் வழங்கப்படும்.

ஊதியங்கள், தொழில்துறை உறவுகள், சமூக பாதுகாப்பு மற்றும் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் (OSH) ஆகிய நான்கு பரந்த குறியீடுகள் ஏற்கனவே குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்த நான்கு குறியீடுகளையும் செயல்படுத்த, விதிகளைப் பற்றிய அறிவிப்புகளை செய்ய வேண்டும்.

இப்போது நான்கு குறியீடுகளில் வரைவு விதிகள் குறித்து ஆலோசிக்கும் பணியை அமைச்சகம் முடித்து, அறிவிப்புக்கு உறுதியளித்துள்ளது.

நான்கு தொழிலாளர் குறியீடுகளுக்கான விதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன

பி.டி.ஐ.யின் ஒரு அறிக்கையின்படி, தொழிலாளர் செயலாளர் அபூர்வா சந்திரா, "நான்கு தொழிலாளர் குறியீடுகளை செயல்படுத்த தேவையான நான்கு குறியீடுகளின் கீழ் விதிகளை நாங்கள் இறுதி செய்துள்ளோம். இந்த விதிகளை அறிவிக்க நாங்கள் தயாராக உள்ளோம். நான்கு குறியீடுகளின் கீழ் விதிகளை உறுதிபடுத்த மாநிலங்கள் தங்கள் பணிகளை மெற்கொள்கின்றன” என்று கூறினார்.

ஊதியங்கள், தொழில்துறை உறவுகள், சமூக பாதுகாப்பு மற்றும் தொழில் பாதுகாப்பு சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் (ஓஎஸ்ஹெச்) ஆகிய நான்கு பரந்த குறியீடுகளில் நாடாளுமன்றம் (Parliament) நான்கு குறியீடுகளை நிறைவேற்றியது. இது இறுதியில் 44 மத்திய தொழிலாளர் சட்டங்களையும் சீரமைக்கும் என கூறப்படுகின்றது.

ஊதியங்கள் குறித்த குறியீடு

ஊதியங்கள் குறித்த குறியீடு 2019 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மற்ற மூன்று குறியீடுகளும் 2020 இல் இரு அவைகளிடமிருந்தும் அனுமதி பெற்றன.

நான்கு தொழிலாளர் குறியீடுகளையும் ஒரே நேரத்தில் செயல்படுத்த அமைச்சகம் விரும்புகிறது. விதிகள் உறுதிபடுத்தப்பட்ட பின்னர், நான்கு குறியீடுகளை ஒரே நேரத்தில் அரசு அறிவிக்கக்கூடும்.

ALSO READ: இனி வாரத்தில் நான்கு வேலை நாட்கள் மட்டுமே.. மத்திய அரசின் புதிய விதி விரைவில்..!!!

முன்னதாக பிப்ரவரி 8, 2021 அன்று, சந்திரா ஒரு செய்தியாளர் கூட்டத்தில், "விதிமுறைகளை உருவாக்கும் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன. வரும் வாரத்தில் இது நிறைவடையும் வாய்ப்பு உள்ளது. இதில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் விதிகளை உருவாக்குவதில் ஆலோசிக்கப்படுகிறார்கள். நான்கு குறியீடுகளான ஊதியங்கள், தொழில்துறை உறவுகள், தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் (ஓஎஸ்எச்) மற்றும் சமூக பாதுகாப்பு குறியீடுகள் ஆகியவற்றை விரைவில் இந்த அமைச்சகம் நடைமுறைப்படுத்தும்." என்று கூறினார்.

உழைப்பாளிகளுக்கான (Labour) குறியீடுகள் மற்றும் சட்டங்கள் அடிக்கடி தொடரும் வகையானவை என்பதால், சில விதிகள் இந்த நான்கு குறியீடுகளின் கீழ் மாநிலங்களால் வடிவமைக்கப்படும்.

மாநிலங்களும் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன

குறியீடுகளின் நடைமுறைப்படுத்தலை உறுதி செய்ய, வரைவு விதிகளை அறிவிப்பதற்கும், செயல்படுத்துவதற்கும் பல வகையான முத்தரப்பு ஆலோசனைகளை மாநிலங்கள் நடத்தி வருகின்றன. 

ALSO READ: 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு குடும்ப ஓய்வூதிய நிவாரணம் அளித்தது மோடி அரசு

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News