தெலங்கானா தேர்தல்; பாஜக-வின் 5-வது வேட்பாளர் பட்டியல் வெளியானது!

எதிர்வரும் தெலங்கான சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் 5-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது!

Last Updated : Nov 18, 2018, 05:06 PM IST
தெலங்கானா தேர்தல்; பாஜக-வின் 5-வது வேட்பாளர் பட்டியல் வெளியானது! title=

எதிர்வரும் தெலங்கான சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் 5-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது!

தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைமையிலான ஆட்சி நடைப்பெற்று வந்த நிலையில் அங்கு முதல்வராக பதவி வகித்து வந்த சந்திரசேகர் ராவ் சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிய 8 மாதங்கள் இருக்கும் முன்னரே சட்டப்பேரவையை கலைத்தார். 

இதைனையடுத்து வரும் டிசம்பர் 7-ஆம் நாள் 119 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட தெலங்கான மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைப்பெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் ஆளும் ராஷ்ட்ரிய சமிதி கட்சி-யும், எதிர்கட்சியாக இருக்கும் காங்கிரஸ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியுடன் கூட்டணி அமைத்தும் ஆட்சியை பிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தெலங்கான சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் 19 பெயர் கொண்ட 5-வது வேட்பாளர் பட்டியலினை பாஜக வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக 93 வேட்பாளர்களின் பெயரினை 4 கட்டமாக வெளியிட்ட பாஜக தற்போது 5-வது வேட்பாளர் பட்டியலினை வெளியிட்டுள்ளது.

தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் - 2018

  • தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரும் 19-ம் தேதி வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம். 
  • நவம்பர் 20-ஆம் நாள் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 
  • நவம்பர் 22-ஆம் நாள் வேட்புமனுக்களைத் திரும்பப்பெற கடைசிநாள்.
  • டிசம்பர் 7-ஆம் நாள் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்
  • டிசம்பர் 11-ஆம் நாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். என குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News