இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்க்கான கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் பட்டியல் என அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வந்தாலும், மறுபுறத்தில் அனல் பறக்கும் பிரசாரத்தில் தேசிய மற்றும் மாநில கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலும், சில மாநில கட்சிகள் தனியாகவும் தேர்தலை சந்திக்கிறது. இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அங்கு அவருக்கு எதிராக பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி களம் காண்கிறார்.
இந்தநிலையல் அமேதி மட்டுமில்லை, கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது. வரும் மக்களவை தேர்தலில் இரண்டு தொகுதியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுகிறார்.
இதனையடுத்து, கேரளவின் வயநாடு தொகுதிக்கு பா.ஜ.க சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத் தர்ம ஜனசேனா கட்சி தலைவரான ஸ்ரீ துஷார் வெலப்பள்ளி என்பவர் தான் அவர்.
கேரளவின் வயநாடு தொகுதியில் 2009 மற்றும் 2014 என இரண்டு முறையும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.