மகாத்மா காந்தி தலைமையில் நடந்த சுதந்திர போராட்டம் ஒரு நாடகம் என BJP அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!
டெல்லி: பெங்களூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய பாஜக எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே, “மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் ஒரு நாடகம், இது போன்ற நபர்களை எப்படி மகாத்மா என்று அழைக்கிறார்கள்” என விமர்சித்துள்ளார். அதுமட்டும் இன்றி, “பிரிட்டிஷ் ஆதரவுடன் தான் அவருடைய போராட்டங்கள் நடைபெற்றது, அவர்கள் ஒரு முறை கூட போலீஸாரால் தாக்கப்பட்டதில்லை” எனவும் கூறியுள்ளார். மகாத்மா காந்தி குறித்து அனந்த்குமார் ஹெக்டே கூறியதில் பாஜக வருத்தமடைந்து அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் உள்ள உத்திர கன்னடா தொகுதி அமைச்சரான அனந்த்குமார் ஹெக்டே, பெங்களூருவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, அவர் ஒட்டுமொத்த சுந்திர போராட்டமும் ஆங்கிலேயர்களின் ஆதரவு மற்றும் ஒப்புதலுடனேயே நடந்தது. இவர்கள் சொல்வது போல் தலைவர்கள் யாரையும் காவல்துறையினர் தாக்கவில்லை. இவர்களின் சுதந்திர போராட்டமே ஒரு மிகப் பெரிய நாடகம். அது நேர்மையான போராட்டமே இல்லை. சுதந்திரம் பெற ஒரு ஒப்பதலுக்கான போராட்டம் மட்டுமே.
மகாத்மா காந்தியின் உண்ணாவிரத போராட்டம், சத்யாகிரகம் ஆகியனவும் நாடகம். காந்தியின் சாகும் வரை உண்ணாவிரதம், சத்யாகிரக போராட்டத்தாலேயே நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்ததாக காங்.,ஐ ஆதரிப்போர் கூறி வருகின்றனர். அது உண்மையல்ல. சத்யாகிரகத்தால் ஆங்கிலேயர்கள் நமது நாட்டை விட்டு செல்லவில்லை. விரக்தியாலேயே ஆங்கிலேயர்கள் சுதந்திரம் அளித்தனர். வரலாற்றை படிக்கும் போது எனது ரத்தம் கொதிக்கிறது. இத்தகையவர்களை எப்படி நமது நாடு மகாத்மா என ஏற்றுக் கொண்டது?. இவ்வாறு அவர் பேசி உள்ளார். இவரின் இந்த சர்ச்சை பேச்சிற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
"மகாத்மா காந்திக்கு பிரிட்டர்களின் சாம்சாக்கள் மற்றும் உளவாளிகளின் பணியாளர்களிடமிருந்து சான்றிதழ் தேவையில்லை" என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்வர் ஷெர்கில் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார். பாஜக-வை 'நாதுராம் கோட்சே கட்சி' என்று பெயர் மாற்ற வேண்டிய நேரம் இது" எனவும் அவர் கடுமையாக சாட்டியுள்ளனர்.