லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள நீதிமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் நடந்த குண்டுவெடிப்பில், தற்போதைய நிலவரப்படி 2 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 5 பேர் காயமடைந்துள்ளனர். மாவட்ட நீதிமன்றம் இயங்கிக்கொண்டிருந்த நேரத்தில் நீதிமன்ற வளாகத்தின் மூன்றாவது மாடியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் குழுவினர், அப்பகுதியை சுற்றி வளைத்துள்ளனர்.
Punjab | Explosion in Ludhiana District Court Complex, several feared injured
Details awaited.
— ANI (@ANI) December 23, 2021
மேலும் நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மக்கள் அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்தனர். அதே நேரத்தில், குண்டுவெடிப்பு குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, வெடிப்பு சத்தம் மிகவும் வலுவாக இருந்ததாகவும், அதன் சத்தம் நீண்ட தூரம் கேட்டது எனக் கூறியுள்ளனர்.
நீதிமன்ற வளாகம் லூதியானா நகரின் மையப்பகுதியில் மாவட்ட ஆணையர் அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ளது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR