EPFO Update: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, அவ்வப்போது தேவைக்கு ஏற்ப சில புதிய விதிகளை அமல்படுத்துகின்றது, பழைய விதிகளில் மாற்றங்களை செய்கிறது. இபிஎஃப் உறுப்பினர்களின் நன்மைக்காகவும், வசதிகளை மேம்படுத்தவும் இபிஎஃப்ஓ தொடர்ந்து பல முயற்சிகளை எடுக்கின்றது.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு நிவாரணம்
சுமார் 8 கோடி உறுப்பினர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஜூன் மாதம் முதல் சுய சான்றளிப்பு வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த வசதியின் மூலம் கெஒய்சி (KYC) செயல்முறையை நிறைவு செய்ய இனி முதலாளிகள் / நிறுவனங்களின் ஒப்புதல் தேவைப்படாது.
Know Your Customer: KYC என்றால் என்ன?
KYC என்பது ஒரு முறை செயல்முறையாகும். இது சந்தாதாரர்களின் யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) KYC விவரங்களுடன் இணைத்து அவர்களின் அடையாளத்தை சரிபார்க்க உதவுகிறது. தற்போது, KYC செயல்முறை முடிவதற்கு முதலாளி / நிறுவம் தனது ஊழியர்களின் விவரங்களை அங்கீகரிக்க வேண்டும்.
EPF Subscribers: எளிதாகும் இபிஎஃப் சந்தாதாரர்களின் செயல்முறை
இந்த அங்கீகாரம் தேவை இல்லை என்ற நிலை ஏற்பட்டால், அதன் மூலம் இபிஎஃப் சந்தாதாரர்களின் செயல்முறை மிக எளிதாகிவிடும். ஏனெனில் தற்போது முதலாளிகளிடமிருந்து / நிறுவனத்திடமிருந்து ஒப்புதல் பெறுவதில் அதிக நேரம் வீணாவதாக கூறப்படுகின்றது. பல நேரங்களில், ஒரு நிறுவனம் மூடப்பட்டு விட்டால், அந்த உறுப்பினரால் ஒப்புதலைப் பெற முடிவதில்லை. புதிய வசதி தேவையற்ற ஆவண பணிகளை நீக்கும், மேலும், கிளெய்ம்கள் நிராகரிப்படுவதும் குறையும் என நம்பப்படுகின்றது.
IT Infrastructure: தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பில் மாற்றம்
EPFO 3.0 இன் கீழ் அறிமுகப்படுத்தப்படும் இந்த வாடிக்கையாளர் நட்பு அம்சத்தைத் தவிர, மூன்று வேலைவாய்ப்பு சார்ந்த ஊக்கத்தொகை (ELI) திட்டங்களை செயல்படுத்தியதைத் தொடர்ந்து நிறுவனத்தில் சேரும் புதிய சந்தாதாரர்களின் கூடுதல் சுமையை நிர்வகிக்க சமூகப் பாதுகாப்பு அமைப்பான இபிஎஃப்ஓ அதன் தகவல் தொழில்நுட்ப (IT) உள்கட்டமைப்பையும் மாற்றுகிறது.
EPFO 3.0 இன் அம்சங்களில் உறுப்பினர்களுக்கு உதவும் பல வித அம்சங்களை எதிர்பார்க்கலாம். மேம்படுத்தப்பட்ட IT உள்கட்டமைப்பின் மூலம் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது உறுப்பினர்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்க முடியும். புதிய உறுப்பினர்கள் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பில் சேரும்போது, செயலில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 கோடியை எட்டும் என எதிர்பார்ப்பதாக இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது.
EPFO 3.0
- இதுமட்டுமின்றி, EPFO 3.0 இன் கீழ், ஓய்வூதிய நிதி அமைப்பு பல்வேறு வங்கிகளுடன் இணைந்து ஒரு வசதியை அறிமுகப்படுத்துவதையும் பரிசீலித்து வருகிறது.
- இதன் மூலம் பயனர்கள் தங்கள் பணத்தை, ஒரு குறிப்பிட்ட அளவிற்கு, கோரிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டிய அவசியமின்றி எடுக்க அனுமதிக்கும்.
- மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பயனர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் தங்கள் பணத்தை எடுக்க உதவும் ஒரு வலுவான தளத்தை உருவாக்க EPFO செயல்பட்டு வருவதாக கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் கூறினார்.
"வங்கி முறையைப் போன்ற ஒரு செயல்முறையை உருவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். மார்ச் மாதத்திற்குள், EPFO 3.0 ஐ நாங்கள் தொடங்கக்கூடும். இதன் மூலம் கிட்டத்தட்ட அனைத்து பயனர் பிரச்சனைகளையும் தீர்க்க முடியும்," என்று அவர் மேலும் தெரிவித்தார். EPFO இப்படிப்பட்ட பல முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், கூடிய விரைவில், இபிஎஃப் கணக்குகளின் செயலாக்கத்தின் வேகம் அதிகரிக்கும் என்றும், திறன் மேம்படும் என்றும் நம்பப்படுகின்றது.
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் குட் நியூஸ்! வருகிறதா 8வது ஊதியக்குழு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ