ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரர் ஒருவர் பலியானார் மேலும் 3 வீரர்கள் காயமடைந்தனர்.
யூரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்திய எல்லைப்பகுதிகள் முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி செக்டரில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ராய்சிங் பலியானார். மேலும் 3 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடந்த 24 மணி நேரத்தில் இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 4 முறை அத்துமீறியுள்ளது என்று குறிப்பிடத்தக்கது.
சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்று இந்திய அரசால் குறிப்பிடப்பட்ட இந்த தாக்குதலால் ஆத்திரம் அடைந்துள்ள பாகிஸ்தான் ராணுவத்தினர், எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின் மீது மட்டும் 286 முறை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் அத்துமீறலாக நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் நேற்றுவரை இந்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 14 வீரர்களும், இந்திய எல்லைக்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் அப்பாவி பொதுமக்கள் 12 பேரும் பலியாகியுள்ளனர்.