காதலனின் கல்லறையில் அடக்கம் செய்யுங்கள்.! காதலியின் உருக்கமான கடிதம்

கர்நாடகாவில் சாலை விபத்தில் காதலன் உயிரிழந்ததால் மனமுடைந்த காதலி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Dayana Rosilin | Last Updated : May 16, 2022, 05:43 PM IST
  • கதலனின் கல்லரையில் அடக்கம் செய்யுங்கள்!
  • காதலியின் உருக்கமான கடிதம்
  • சோகத்தில் முழ்கிய கிராமம்
காதலனின் கல்லறையில் அடக்கம் செய்யுங்கள்.! காதலியின் உருக்கமான கடிதம் title=

கர்நாடகா மாநிலம் தும்கூர் அருகே உள்ள மஸ்க்கள் கிராமத்தை சேர்ந்தவர் தனுஷ். இவர் பெங்களூரு எலஹங்க பகுதியில் துணி கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.இவர்,மஸ்க்கள் கிராமத்திற்கும் அருகே உள்ள ஆரஹள்ளி கிராமத்தை சேர்ந்த பட்டதாரி பெண்ணான சுஷ்மா என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் உறவினர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனுஷ் தனது சொந்த ஊரில் நடைபெறவிருந்த கோயில் திருவிழாவில் பங்கேற்பதற்காக கடந்த 11ஆம் தேதி பெங்களூரில் இருந்து கார் மூலம் மஸ்க்கள் கிராமத்திற்கு புறப்பட்டுள்ளார். கார் பெங்களூர் - துமகூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது நிலமங்களா என்ற பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று தனுஷின் காரில் மோதியுள்ளது.

மேலும் படிக்க | VJ சித்ராவைத் தொடர்ந்து மற்றொரு இளம் சீரியல் நடிகை மர்ம மரணம்!

இதனால் பலத்த காயமடைந்த தனுஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த தனுஷின் உறவினர்கள் உடற்கூறு ஆய்வுக்கு பிறகு அவரின் உடலை அடக்கம் செய்துள்ளனர். இந்நிலையில் காதலனின் பிரிவை தாங்க முடியாமல் தனிமையில் இருந்த சுஷ்மா, வீட்டில் வைத்திருந்த பூச்சிமாத்திரைகளை எடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

முன்னதாக அவர் எழுதிய கடிதத்தில் தனுஷை பிரிந்து தன்னால் வாழ முடியாது எனவும், தனது உடலை தனுஷை அடக்கம் செய்த இடத்திற்கு அருகில் அடக்கம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இதனை இருவரையும் இழந்து துயரத்தில் வாடிய தனுஷ் மற்றும் சுஷ்மாவின் உறவினர்கள், தனுஷை அடக்கம் செய்த இடத்திலேயே சுஷ்மாவையும் அடக்கம் செய்துள்ளனர். காதலன் இறந்த நான்கே நாட்களில் பிரிவை தாங்க முடியாமல் காதலியும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | எனக்கும் பசிகும்ல...போட்டி போட்டு சாப்பிடும் எலிக்கூட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News