மும்பை புறநகர் பகுதியில் அமைந்துள்ளது செம்பூர் சர்காம் சொசைட்டி. சுமார் 148 குடிருப்புகள் கொண்ட அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் கடந்த டிசம்பர் 27-ஆம் நாள் 14-வது மாடியில் தீ-விபத்து ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த தீ-விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புறநகர் பகுதியில் இருந்த போதிலும், பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டுள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ-விபத்தினை அனைப்பதற்கும், பலியான உயிர்களை காப்பதற்கும் ஏன் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை... இதற்கான காரணங்களை தேடி பார்த்தால், கிடைக்கும் தகவல்கள் பல நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.
148 குடியிருப்பு கொண்டு இந்த அப்பார்ட்மெண்டில், 60 வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்கள் மட்டுமே உள்ளது. குடியிருப்பில் இருப்பவர்களின் மீத வாகனங்கள் கட்டிடத்திற்கு வெளியேயே நிறுத்தப்படுகின்றன. குறிப்பாக ஆடுக்குமாடியின் வாயில் துவங்கி சாலை முனை வரையிலும்... சில பொழுது சாலைகளையும் அடுத்துக்கொண்டு.
இதன் காரணமகா சம்பவநாள் அன்று தீ-யனைப்பு வீரர்கள் தீயை அனைக்கும் பணிக்கு முன்னதாக வழிமறித்து நின்றிருந்த வாகனங்களை ஒதுக்கி, தீயனைப்பு வாகனத்தை அடுக்குமாடியின் அருகில் கொண்டு செல்வதில் அதிக நேரத்தினை செலவிட்டனர். சம்பவ நாள் அன்று குடியிருப்பு வாசிகளும் தீயனைப்பு வீரர்களுக்கு உதவும் வகையில் வாகனங்களை ஒதுக்கி வழி உண்டாக்க முயன்றனர், இருப்பினும் அவசரத்தில் அண்டாவில் கைவிட்டாலும் நுழைவதில்லையே...
இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் அடுக்குமாடி கட்டிடத்தில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் அதற்கு மேல். கட்டத்தை விட்ட வெளியே நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள், மின்சாரா இணைப்பிற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு சிறு தீப்பொறி எழுந்தாலும் ஒட்டுமொத்த வாகனங்கள், குடியிறுப்பு பகுதியும் சாம்பல் ஆகியிருக்கும்.
திடீரென ஏற்படும் தீயினை கட்டுப்படுத்த ஏதுவாக கட்டிடத்தின் பாதுகாப்பு அம்சம், நீர் தொட்டி இணைப்புடன் இணைக்கப்படவில்லை. இங்கு வசிக்கும் குடியிறுப்பு வாசிகள் தங்கள் சொந்த செலவில் தங்கள் வீட்டிற்கான பாதுகாப்பு அம்சங்களை தனித்தனியே மேற்கொண்டு வந்துள்ளனர். 4-வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட அந்த அடுக்குமாடி குடியிறுப்பில் இதுவரை தேவையாக பாதுகாப்பு அம்சங்களை அமைக்கப்படாதது இந்த விபத்தின் பலி எண்ணிக்கை உயர்வுக்கு முக்கிய காரணம் என குடியிருப்பு வாசிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடரப்பாக திலக் நகர் காவல்துறையினர், ரிலையன்ஸ் ரியல்டர்ஸ் என்ற பெயரில் இந்த அடுக்குமாடி குடியிருப்பினை விற்பனை செய்த ஹனுமந்திரா மாப்ரா, சுபாக் மாப்ரா மற்றும் கோத்தாரி என்பர்களின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். விற்பனை செய்யப்பட்ட குடியிறுப்புகளில் முறையான பாதுகாப்பு அம்சங்கள் சேர்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் பெயரில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.