நீரவ் மோடி வரிசையில் மற்றொரு மோசடி; 14 அரசு வங்கிகளுக்கு ரூ. 35 ஆயிரம் கோடி இழப்பு

நீரவ் மோடியின் வரிசையில் மற்றொரு நிறுவனம் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஸ்டெர்லிங் பயோடெக் என்ற நிறுவனம் 14 அரசு வங்கிகளின் ரூ.35 ஆயிரம் கோடியை சூறையாடியுள்ளது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jan 21, 2020, 10:28 PM IST
நீரவ் மோடி வரிசையில் மற்றொரு மோசடி; 14 அரசு வங்கிகளுக்கு ரூ. 35 ஆயிரம் கோடி இழப்பு
File photo

புது டெல்லி: நீரவ் மோடியின் வரிசையில் மற்றொரு நிறுவனம் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஸ்டெர்லிங் பயோடெக் என்ற நிறுவனம் 14 அரசு வங்கிகளின் ரூ.35 ஆயிரம் கோடியை சூறையாடியுள்ளது. 4 தனியார் நிறுவனங்கள் மற்றும் அதன் இயக்குநர்கள் உட்பட குற்றம் சாட்டப்பட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. கான்பூர், டெல்லி, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் செயல்பட்டு வந்த நிறுவனத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. பாங்க் ஆப் இந்தியா உட்பட 14 வங்கிகளில் மோசடி நடந்துள்ளது. 

செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ படி, இந்த மோசடி ஃபிரோஸ்ட் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் உதய் தேசாய் மற்றும் சஞ்சய் தேசாய் ஆகியோரால் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்பதற்காக அவர்கள் மீது சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கான்பூரை தளமாகக் கொண்ட நிறுவனம் பல்வேறு பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளது என்று புகாரில் பாங்க் ஆப் இந்தியா (BOI - பிஓஐ) தெரிவித்துள்ளது. அதன் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் மும்பையில் உள்ளது. 

இந்நிறுவனம் பங்களாதேஷ், சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, கம்போடியா, சவுதி அரேபியா, சுவிட்சர்லாந்து, தைவான் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது.

அந்த நிறுவனத்தின் மீது அளிக்கப்பட்ட புகாரில், BOI தலைமையிலான 14 அரசுக்கு சொந்தமான வங்கிகளில் இருந்து சுமார் 4061.95 கோடி ரூபாய் கடன் வசதியை நிறுவனம் பெற்றுள்ளதாக புகாரில் கூறப்பட்டு உள்ளது. நிறுவனத்தின் பொருட்கள் கொள்முதல் பரிவர்த்தனை மற்றும் பொருட்கள் இயக்கம் பற்றிய விவரங்கள் தவறானவை என்று கண்டறியப்பட்டது. பில்கள் தவறாக கையாளப்படுவது கண்டறியப்பட்டது. உண்மையில் பொருட்களை நிறுவனம் ஏற்றுமதி செய்யவில்லை என்பதைக் குறிக்கிறது எனக் கூறப்பட்டு உள்ளது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.