பீஹார் முதல்வராக, 1994 -1996-ல், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர், லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது, கால்நடை தீவனம் வாங்கியதாக போலி பில்கள் கொடுத்து, அரசு கருவூலத்தில் பணம் எடுத்து, மோசடி நடந்ததாக புகார்கள் எழுந்தன.
இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தொடர்புள்ள அனைத்து வழக்குகளும், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தன இதில் தியோகர் மாவட்ட கருவூலத்தில், ரூ.89.27 லட்சம் எடுத்து, மோசடி செய்தது தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடைந்தது.
ராஞ்சி சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சிவ்பால் சிங், கடந்த ஆண்டு டிசம்பரில் தீர்ப்பளித்தார். அப்போது, 'லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி' என, நீதிபதி அறிவித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும், 15 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இதை தொடர்ந்து, இன்று தண்டனை விவரன் அறிவிப்பதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இவருக்கு என்ன தண்டனை என்பது குறித்து நாளை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
#FLASH: Quantum of sentence for Lalu Yadav and others in a fodder scam case to be pronounced tomorrow pic.twitter.com/vRLwN139aJ
— ANI (@ANI) January 3, 2018
#FLASH: Ranchi Special CBI Court summons Raghuvansh Prasad Singh, Tejashwi Yadav and Manoj Jha on January 23rd pic.twitter.com/Y6tzBR7uZB
— ANI (@ANI) January 3, 2018