கடந்த 23 ஆம் தேதி நள்ளிரவு சிபிஐ அமைப்பின் புதிய தற்காலிக இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமனம் செய்யப்பட்டார். இதற்க்கு முன்பு சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் முக்கிய நகரங்களில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள CBI தலைமை அலுவலகம் முன்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் CBI தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை கட்டுப்படுத்த டெல்லி போலீசார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்களை கைது செய்தனர்.
#WATCH Congress President Rahul Gandhi and Ashok Gehlot lead the protest march to CBI HQ against the removal of CBI Chief Alok Verma. pic.twitter.com/7FNkhoWQCb
— ANI (@ANI) October 26, 2018
சிபிஐ இயக்குனராக அலோக் வர்மாவும் மற்றும் சிறப்பு சிபிஐ இயக்குனராக அஸ்தனாவும் தொடருவார்கள் என மத்திய அரசு கூறியுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே CBI இயக்குனர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதற்கு ஆட்சேபம் தெரிவித்து கடிதம் எழுதினார். அதில், CBI இயக்குனர் விவகாரத்தில் தலையிட பிரதமருக்கும் மத்திய கண்காணிப்பு ஆணையத்திற்கும் அதிகாரம் இல்லை என்று மல்லிகார்ஜூன கார்கே குறிப்பிட்டுள்ளார்.
Chandigarh: Police use water cannon at Congress workers who are protesting against the removal of CBI Director Alok Verma pic.twitter.com/SXwR3AgGRq
— ANI (@ANI) October 26, 2018
அதேபோல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டதால் தான் CBI இயக்குனர் ஆலோக் வர்மா மாற்றப்பட்டதாக குற்றம் சாட்டினார். ரஃபேல் விமானம் குறித்து யார் விசாரணை நடத்தினாலும் இது தான் கதி என்று பிரதமர் மோடியின் நடவடிக்கை அமைந்துள்ளதாகவும், இது இந்திய அரசியல் சாசனத்தை அவமதிக்கும் செயல் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.