விரைவில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள், மதிப்பெண் குறித்து புதிய அப்டேட்

CBSE Board Result 2022: CBSE 10, 12 ஆம் தேர்வு முடிவுக்காக சுமார் 34 லட்சம் மாணவர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கிடையில் மாணவர்கள் பெற்ற உள் மதிப்பெண்கள் குறித்து சிபிஎஸ்இ முக்கிய அப்டேட்டை அறிவித்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 20, 2022, 01:25 PM IST
  • CBSE 10, 12 ஆம் வகுப்பு முடிவுகளை 2022 சரிபார்ப்பது எப்படி
  • சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் ஜூலை 23 வெளியீடா?
  • மதிபெண்கள் எப்படி கணக்கிடப்படும்
விரைவில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள், மதிப்பெண் குறித்து புதிய அப்டேட் title=

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அதாவது சிபிஎஸ்இ நிர்வாகம் 10, 12ஆம் வகுப்புகளுக்கான டெர்ம் 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. அந்தவகையில் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, சிபிஎஸ்இ 10 ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி சிபிஎஸ்இ போர்டு டெர்ம் 1 மற்றும் டெர்ம் 2 க்கான மதிப்பீட்டு அளவுகோல்களின் அடிப்படையில் ஒருங்கிணைந்த முடிவை வெளியிடும். எனவே இந்த ஆண்டு மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படும் என்பதை இங்கே பார்க்கலாம்.

இந்த நிலையில் சிபிஎஸ்இ 10 ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவைப் பொறுத்தவரை, முன்னதாக தெரிவிதாதை போல் இந்த மாதத்ததின் கடைசி வாரத்தில் வெளியிடப்படலாம், அதன்படி சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடிவுகளை முறையே ஜூலை 23 மற்றும் ஜூலை 28 ஆம் தேதிகளில் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வு முடிவு வெளியீடு தேதி குறித்த அறிவிப்புகள் பகிரப்பட்டவுடன், மாணவர்கள் அனைவரும் cbse.gov.in இல் சரிப்பார்க்கலாம்.

மேலும் படிக்க | பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட் பெறுவது எப்படி

இதற்கிடையில் தேர்வு மதிபெண் மதீப்பீடு குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை இரண்டு டெர்ம்களில் போர்டு நடத்தியது. மாணவர்களுக்கு 50 - 50 என இரண்டு விதிமுறைகள் பிரிக்கப்பட்டன. இதில் இன்டெர்னல் மதிப்பெண்களில் 50:50 பிரிவும் அடங்கும்.

அந்தவகையில் தற்போது மாணவர்கள் எழுதியுள்ள இந்த தேர்வில் வெயிட்டேஜ் ஃபார்முலாவில், டெர்ம் 1 மற்றும் டெர்ம் 2 தியரி மதிப்பெண்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இன்டெர்னல் மதிப்பெண்களுக்குப் பொருந்தாது என்றும் சிபிஎஸ்இ தெளிவுபடுத்தியுள்ளது. அதேபோல் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் இன்டெர்னல் மதிப்பெண்கள் இறுதி மதிப்பெண்ணுடன் சேர்க்கப்படும். மேலும் வெயிட்டேஜ் பொறுத்தவரை அது தியரி மதிப்பெண்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக: டெர்ம் 1 க்கான வெயிட்டேஜ் 30% மற்றும் டெர்ம் 2 க்கு 70%. மேலே உள்ள எடுத்துக்காட்டில் 80:20 தியரி மற்றும் இன்டர்னல் பிளவு, டெர்ம் 1 தாள் மொத்தம் 40 மதிப்பெண்களாகவும், டெர்ம் 2 ல் 40 மதிப்பெண்களாகவும் இருந்திருக்கும். எனவே அந்த மாணவர் பின்வரும் மதிப்பெண்களைப் பெற்றுள்ளார் என்று எடுத்துக்கொள்வோம்.

  டெர்ம் 1 டெர்ம் 2
தியரி  35 37
இன்டெர்னல் 10 10

இப்போது, 30:70 வெயிட்டேஜுக்கு, மாணவர் டெர்ம் 1ல் 24 மதிப்பெண்களும், டெர்ம் 2ல் 56 மதிப்பெண்களும் பெறுவார்கள். எனவே மதிபெண் கணக்கீடு இப்படித்தான் இருக்கும்.

  டெர்ம் 1 டெர்ம் 2
மொத்த தியரி மதிப்பெண்கள் 40 40
%வெயிட்டேஜ் 30% of 80 70% of 80
பெற்ற மதிப்பெண்கள் 35 37
கணக்கிடப்பட்ட மதிப்பெண்கள் 21 51.8
இன்டெர்னல் 10  10

 

வழங்கப்படும் மதிப்பெண்கள் டெர்ம்  1 கணக்கிடப்பட்ட மதிப்பெண்கள் + டெர்ம் 2 கணக்கிடப்பட்ட மதிப்பெண்கள் + டெர்ம் 1 இன்டெர்னல் + டெர்ம் 2 இன்டெர்னல். இதன் பொருள் (மேலே உள்ள எடுத்துக்காட்டில்) 21+51.8+10+10 = 92.8 அல்லது 93 மதிப்பெண்கள் ஆகும்.

மேலும் படிக்க | 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று செய்முறைத் தேர்வு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News