முப்படையில், விமானப்படையில் தான் பெண் அதிகாரிகள் அதிகம்!

விமானப்படையில் 13.09% பெண் அதிகாரிகள் பணியாற்றுவதாகவும், முப்படைகளில் பெண்களின் எண்ணிக்கையில் இதுதான் அதிகம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது!

Updated: Dec 12, 2018, 08:36 PM IST
முப்படையில், விமானப்படையில் தான் பெண் அதிகாரிகள் அதிகம்!
Representational Image

விமானப்படையில் 13.09% பெண் அதிகாரிகள் பணியாற்றுவதாகவும், முப்படைகளில் பெண்களின் எண்ணிக்கையில் இதுதான் அதிகம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது!

இது தொடர்பாக பாதுகாப்பு துறை இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே லோக்சபாவில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளதாவது... விமானப்படையில் 13.09% பேரும், ராணுவத்தில் 3.80% பேரும், கடற்படையில் 6% பேரும் பெண் அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர். முப்படையிலும், பெண்கள் அதிகாரிகள் அதிகமாக இருப்பது விமானப்படையில் தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரஷ்யாவில் பாதுகாப்பு தளவாடங்கள் வாங்குவதற்கு அமெரிக்க தடை குறித்து அமைச்சர் தெரிவிக்கையில்... தடை காரணமாக பாதுகாப்பு தளவாட கொள்முதலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. மஹாராஷ்டிரா ராணுவ குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பாக விசாரணை நடத்த குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்!