ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சக்தி காந்த தாஸ் (Shaktikanta Das) இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக (RBI Governor) 2018 ஆம் ஆண்டும் முதல் பணியாற்றி வரும் நிலையில், அவரது பதவி காலத்தை மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டித்து உத்தரவு வெளியாகியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் 25 ஆவது ஆளுநராகத் தற்போதுள்ள சக்தி காந்த தாஸ், இதற்கு முன்னர் இந்தியாவின் பதினைந்தாம் நிதி ஆணையத்தின் உறுப்பினராகவும், G20 கூட்டமைப்பில், இந்தியப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார். மேலும், பொருளாதார விவகாரச் செயலாளர், வருவாய்த்துறைச் செயலாளர், உட்பட இந்திய ஆட்சிப் பணியில் மத்திய மற்றும் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ| AIR India நிலுவைத் தொகை தொடர்பாக நிதி அமைச்சகம் அதிரடி அறிவிப்பு
வரும் டிசம்பர் மாதம் 12ம் தேதி அவரது பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில், ‘10.12.2021ம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கு அல்லது அடுத்த உத்தரவு வரும் வரையில், சக்திகாந்த தாஸை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக மீண்டும் நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது" என்று மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Centre extends RBI Governor Shaktikanta Das' term for three years
Read @ANI Story | https://t.co/0FNF4qLd1U#RBI #RBIGovernor pic.twitter.com/WfDC1pZDiP
— ANI Digital (@ani_digital) October 29, 2021
2008ம் ஆண்டு முதல் மத்திய அரசுப் பணிகளை ஆற்றி வரும் இவர், முன்னதாக தமிழக அரசின் வருவாய்த்துறை ஆணையர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், தொழில்துறைச் செயலாளர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | ‘நிலுவையில் உள்ள ₹3 கோடி வரியை உடனே செலுத்தவும்’ : அதிர்ச்சியில் ரிக்ஷா ஓட்டுநர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR