டீ ஆரோக்கியமானது தான்.. பச்சை கொடி காட்டிய அமெரிக்காவின் FDA

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (US FDA) கேமல்லியா சினென்சிஸில் என்ற உயிரியல் கொண்ட தேயிலை அல்லது டீ கொண்டு தயாரிக்கப்படும் தேநீர் ஆரோக்கியமான பானமாக அங்கீகரித்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 22, 2024, 03:31 PM IST
  • அசோசியேஷன் FDA அமைப்பின் அறிக்கை.
  • தேயிலையை ஆரோக்கியம் பானமாக ஊக்குவிக்க இந்திய அரசு முன்வரவேண்டும்.
  • டீ என்னும் தேயிலையின் ஊட்டச்சத்து மதிப்பை உறுதிப்படுத்துகிறது என்று ITA கூறியது.
டீ ஆரோக்கியமானது தான்.. பச்சை கொடி காட்டிய அமெரிக்காவின் FDA title=

இந்தியர்கள் வாழ்வில் டீ எனப்படும் தேநீர் என்னும் பானம் வாழ்க்கையில் இருந்து பிரிக்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.  புத்துணர்ச்சி பெற பலர் நம்பியிருக்கும் பானமான இது பெரும்பாலும் ஆரோக்கியமற்ற பானங்கள் என்ற பிரிவில் தான் உணவியல் நிபுணர்கள் பலர் வைத்துள்ளனர். அதனை அளவோடு குடிக்க வேண்டும் என பரிந்துரைக்கும் பலரை நாம் சந்தித்து இருப்போம். ஆனால் இப்போது இந்த கருத்தில் இருந்து மாறுபடும் வகையில் செய்தி ஒன்று வெள்யாகியுள்ளது.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (US FDA) கேமல்லியா சினென்சிஸில் என்ற உயிரியல் கொண்ட தேயிலை அல்லது டீ கொண்டு தயாரிக்கப்படும் தேநீர் ஆரோக்கியமான பானமாக அங்கீகரித்ததை வடகிழக்கு தேயிலை சங்கம் (The North Eastern Tea Association - NETA) மற்றும் இந்திய தேயிலை சங்கம் (Indian Tea Association - ITA) ஆகியவை வரவேற்றுள்ளன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு, டீயின் எண்ணற்ற ஆரோக்கிய நலன்கள் தொடர்பான உலகளாவிய தேயிலை தொழில்துறையின் கூற்றுகளை உறுதிப்படுத்துகிறது எனவும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 19 அன்று, US FDA  அமைப்பு 'ஆரோக்கியமான' ஊட்டச்சத்து உள்ளடக்கம் கொண்ட உணவுகள் பானங்கள் குறித்த தகவலை புதுப்பித்து, டீ பிரியர்களுக்கு சந்தோஷமான செய்தி ஒன்றை வெளியிட்டது. நுகர்வோர், ஆரோக்கிய நலனகளை பூர்த்தி செய்யும் வகையிலான உணவுகளை அடையாளம் காண உதவும் இந்த தகவல்களில், டீ இப்போது 'ஆரோக்கியமான' பானம் என்ற நிலையக்கு தகுதி பெற்றுள்ளது என்ற அறிவிப்பு, டீ தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், டீ சாகுபடி செய்பவர்களுக்கும் உற்சாகத்தை அளித்துள்ளது.

மேலும் படிக்க | காலை உணவில் செய்யும் 4 தவறுகள் LDL கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்..!

இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள இந்திய தேயிலை சங்கங்கள்

அமெரிக்காவின் தேயிலை சங்கத்தின் தலைவர் பீட்டர் எஃப். பீட்டர் எஃப். கோகி, உலகளாவிய தேயிலை தொழில்துறைக்கான அங்கீகாரத்தை "அருமையான செய்தி" என்று அழைத்தார். தேயிலை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பானமாக இருக்கும் திறனை எடுத்துக்காட்டுகிறது. இதே போல், NETA ஆலோசகரும், இந்திய தேயிலை வாரியத்தின் முன்னாள் துணைத் தலைவருமான பித்யானந்தா போர்ககோடி, தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். FDA அளித்துள்ள அங்கீகாரம் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தேயிலையின் ஆரோக்கிய நன்மைகளை உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. தேயிலையை ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறை பானமாக ஊக்குவிக்க இந்திய அரசு முன்வரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அசோசியேஷன் FDA  அமைப்பின் அறிக்கையில், தண்ணீர், தேநீர் மற்றும் காபி போன்ற பானங்கள் ஐந்துக்கும் குறைவான கலோரிகளைக் கொண்ட பானங்கள் என்பதால்,  இதனை ஆரோக்கியமான பானமாக அறிவிக்க தகுதி பெறும் என கூறியுள்ளது . இந்த அறிவிப்பு டீ என்னும் தேயிலையின் ஊட்டச்சத்து மதிப்பை உறுதிப்படுத்துகிறது என்று ITA கூறியது.

NETA  அமைப்பு பகிரந்துள்ள ஒரு அறிக்கையில், சில புற்றுநோய்களுடனான அதன் உறவு போன்ற சாத்தியமான ஆரோக்கிய நலன்களுடன் கேமல்லியா சினென்சிஸை இணைக்கும் முந்தைய கண்டுபிடிப்புகளை FDA ஒப்புக்கொண்டது என கூறியுள்ளது. இருப்பினும், "ஆரோக்கியமான" பானங்களில் கெமோமில், மிளகுக்கீரை, இஞ்சி, லாவெண்டர், அல்லது மசாலா தேநீர் உள்ளிட்ட பிற தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படும் மூலிகை டீகளுக்கு பொருந்தாது என்று நிறுவனம் தெளிவுபடுத்தியது.

மேலும் படிக்க | இந்த இலைகளை சாப்பிட்டால் ஹெல்தியான வாழ்க்கை உறுதி... ஆனால் ஒரு கண்டிஷன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News