கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கேரள மாநிலத்திற்கு இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது!
இந்த அறிவிப்பின் படி...
Changes in pattern of train services due to landslips in Trivandrum Division pic.twitter.com/uENww5StVv
— @GMSouthernrailway (@GMSRailway) August 16, 2018
- கடந்த 14.08.2018 அன்று டெல்லியில் இருந்து புறப்பட்ட வண்டி எண் 12626: டெல்லி - திருவணந்தபுரம் செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ, ஈரோடு, தின்டுக்கல், திருநெல்வேலி வழி மார்கமாக மாற்றியனுப்பபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த 15.08.2018 அன்று ஐதராபாத்தில் இருந்து புறப்பட்ட வண்டி எண் 17230: ஐதராபாத் - திருவணந்தபுரம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ்.. ஈரோடு, தின்டுக்கல், திருநெல்வேலி வழி மார்கமாக மாற்றியனுப்பபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இன்று 16.08.2018 கன்யாகுமாரியில் இருந்து புறப்பட்டு பெங்களூரு செல்லும் வண்டி எண் 16525: கன்யாகுமாரி - பெங்களூரு செல்லும் ஐலேன்ட் எக்ஸ்பிரஸ, ஈரோடு, தின்டுக்கல், திருநெல்வேலி, கரூர். சேலம், வழி மார்கமாக மாற்றியனுப்பபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்.,
- வண்டி எண்: 16603 மங்களூரு - திருவனந்தபுரம் மாவேலி எக்ஸ்பிரஸ்
- வண்டி எண்: 16630 மங்களூரு - திருவனந்தபுரம் மலபார் எக்ஸ்பிரஸ்
- வண்டி எண்: 12081 கன்னூர் - திருவனந்தபுரம் சப்தபடி எக்ஸ்பிரஸ்., ஆகிய வண்டிகளின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.