பிரிக்ஸ் மாநாடு கோவா மாநிலத்தில் இன்று துவங்கியது. இதில் கலந்த கொள்வதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வந்தார். அவர் இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது என்எஸ்ஜி, மசூத் ஆசாருக்கு தடை விதிப்பது உள்ளிட்ட விவகாரங்களை மோடி எழுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிக்ஸ் மாநாட்டில் ரஷிய ஜனாதிபதி புதினும், பிரதமர் மோடியும் ஏற்கனவே சந்தித்தன. இரு நாட்டின் நலன்களை குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.