மணிப்பூரில் சரிவு காணும் முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான அரசு...பாஜக ஆட்சி தப்புமா?

முதல்வர் என்.பிரேன் சிங் தலைமையிலான மணிப்பூரில் பாஜக அரசு வீழ்ச்சியடைய உள்ளது.

Last Updated : Jun 18, 2020, 09:37 AM IST
    1. மணிப்பூரில் 3 பாஜக எம்எல்ஏ.க்கள் உள்பட 11 பேர் ராஜினாமா.
    2. மணிப்பூர் சட்ட மன்றத்தில் பாஜக தனது 9 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இழந்தது
மணிப்பூரில் சரிவு காணும் முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான அரசு...பாஜக ஆட்சி தப்புமா?  title=

மணிப்பூரில் 3 பாஜ எம்எல்ஏ.க்கள் உள்பட 11 பேர் ராஜினாமா செய்துள்ளதால் அங்கு பாஜக ஆட்சி வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பாஜகவை சேர்ந்த பிரேன் சிங் முதல்வராக உள்ளார். இந்நிலையில், பாஜகவை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் தற்போது கட்சித்தாவலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பாஜகவை விட்டு பிரிந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். மேலும், பாஜகவுக்கு ஆதரவு அளித்து வந்த 6 சுயச்சை எம்எல்ஏக்கள் தற்போது தங்கள் ஆதரவை திரும்பப் பெற்றுள்ளனர். 

இதனால் முன்னாள் முதல்வர் ஒக்ரம் இபோபி சிங் புதிய தலைவராக இருப்பார் என்றும் மாநிலத்தில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான உரிமை கோர காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக புதன்கிழமை காங்கிரஸ் கட்சி அறிவித்து. 

60  சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மணிப்பூரில், கடந்த 2017 தேர்தலின் போது 28 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் இருந்தது. ஆனால், 21 எம்எல்ஏ.க்களை மட்டுமே தன் வசம் வைத்திருந்த பாஜக, தலா 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற லோக் ஜனசக்தி, திரிணாமுல் காங்கிரஸ், சுயேச்சையுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது.

"கட்சி வாரியான நிலைப்பாட்டின் படி, இது தற்போதைய மாநில அரசாங்கத்தின் சிறுபான்மையினராக குறைந்துவிட்டால், நாங்கள் நிச்சயமாக floor test சோதனைக்கு செல்வோம். அவர்கள் நிச்சயமாக சிறுபான்மையினராக இருந்தால், நாங்கள் அரசாங்கத்தை அமைப்போம் என்று செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் இபோபி சிங், தெரிவித்தார். 

Trending News