கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்., கட்சி!

தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி!!

Last Updated : Jun 19, 2019, 03:19 PM IST
கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்., கட்சி!  title=

தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி!!

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை அடைந்தது. காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியதால் அக்கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

இதனையடுத்து கர்நாடகா மாநிலத்தில் படுதோல்வி அடைந்ததால், அம்மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைக்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி  உத்தரவிட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், ‘கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டி கலைக்கப்படுகிறது. அதே சமயம் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் செயல் தலைவர் ஆகியோர் தொடர்ந்து பதவியில் நீடிப்பார்கள்’ என கூறியுள்ளார். 

காங்கிரஸ் தொடர்பான கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி (KPCC) தலைவர் தினேஷ் குண்டு ராவ் ANI செய்தி நிருவனத்திடம் கூறுகையில்; காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் நாங்கள் தேர்தலுக்கு முன்னர் செய்த குழுவை ஒழுங்கமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். இப்போது நாம் எப்படி KPCC ஐ மாற்றியமைப்பது என்பது மட்டுமல்லாமல், மாவட்ட காங்கிரஸ் மற்றும் பிளாக் காங்கிரசின் குழுக்களை எப்படி மறுசீரமைப்பது என்பதைப் பார்ப்போம். இது அனைத்து மட்டங்களிலும் கட்சியின் மொத்த மறுசீரமைப்பாக இருக்கும் என்றார். 

எம்.எல்.ஏ ரோஷன் பேக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ் கூறுகையில்; முதற்கட்ட விசாரணை அவரை இடைநீக்கம் செய்ய வழிவகுத்தது. இப்போது மேலதிக விசாரணைக்குப் பிறகு ஏ.ஐ.சி.சி முடிவு செய்யும். மேலும், ஊடகங்களுக்குச் செல்வதற்குப் பதிலாக, அவர் டெல்லியில் உள்ள தலைவர்களிடம் சென்றிருக்க வேண்டும், அது இன்னும் விவேகமானதாக இருந்திருக்கும்" என்றார். 

 

Trending News