இன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாள் ஆகும். காங்கிரஸ் தலைவர்கள் அவரது உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாள் ஆகும். அவரது நினைவு நாளை முன்னிட்டு, டெல்லியில் அமைத்துள்ள அவரது சமாதியில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். மேலும் பல காங்கிரஸ் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
அதே சமயத்தில் இன்று சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம். இன்றைய தினத்தை தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. நாடு முழுவது அவரது பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது சிலைக்கு பல தலைவர்கள் மரியாதையை செலுத்தினார்கள்.
#Delhi: Former President Pranab Mukherjee pays tribute to Former PM Indira Gandhi on her death anniversary, at Shakti Sthal pic.twitter.com/9xlJrohRIu
— ANI (@ANI) October 31, 2017
#Delhi: Former PM Manmohan Singh, Congress VP Rahul Gandhi pay tributes to Former PM Indira Gandhi on her death anniversary, at Shakti Sthal pic.twitter.com/ux7rsVf52R
— ANI (@ANI) October 31, 2017
டெல்லி பார்லிமெண்ட் பக்கத்தில் அமைத்துள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.