டெல்லியில் தொடர் பனிமூட்டம்- 81 ரயில்கள் தாமதம், 6 ரத்து

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடரும் பனி மூட்டத்தால் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

Last Updated : Dec 13, 2016, 01:14 PM IST
டெல்லியில் தொடர் பனிமூட்டம்- 81 ரயில்கள் தாமதம், 6 ரத்து title=

புதுடெல்லி: டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடரும் பனி மூட்டத்தால் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில வாரங்களாகவே டெல்லியில் பனியின் தாக்கம் அதிகம் உள்ளதால் விமானம் மற்றும் ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

இந்நிலையில் கடும் பனிமூட்டடின் காரணமாக இன்று டெல்லியில் இருந்து புறப்படும் 81 ரயில்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 ரயில்களின் பயண நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இஸ்லாம்பூர்-புது தில்லி மகத் எக்ஸ்பிரஸ் 48 மணி நேரம் தாமதமாக செயல் படுகிறது, புவனேஸ்வர்-புது தில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் 22 மணி நேரம் தாமதமாக செயல் படுகிறது புவனேஸ்வர்-புது தில்லி வாராந்திர எக்ஸ்பிரஸ் 38 மணி நேரம் தாமதமாக செயல் படுகிறது என்று வடக்கு ரயில்வே அதிகாரி கூறியுள்ளார்.

Trending News