Amogh Lila Das: விவேகானந்தர் மற்றும் ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகியோரை விமர்சித்ததாக கூறி துறவி ஒருவரை கிருஷ்ணா உணர்வுக்கான சர்வதேச சங்கம் என கூறப்படும் இஸ்கான் (ISKCON) தடை செய்துள்ளது. இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் துறவிகளான விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் குறித்து இழிவான மற்றும் மோசமான கருத்துகளை தெரிவித்ததற்காக தாஸ் மீது விரைவான நடவடிக்கை எடுத்துள்ளதாக இஸ்கான் அமைப்பு தெரிவித்துள்ளது.
''அவர் கூறியது முற்றிலும் பொருத்தமற்ற மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்கள். இந்த இரு ஆளுமைகளின் சிறந்த போதனைகள் பற்றிய புரிதல் அவரிடம் இல்லாததால் நாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளோம்" என இஸ்கான் தெரிவித்தது.
என்ன சர்ச்சை?
இந்த சர்ச்சைக்குரிய துறவியின் அமோக் லீலா தாஸ் ஆகும். சுவாமி விவேகானந்தர் மீன் சாப்பிட்டார் என விமர்சித்து, ஒரு நல்லொழுக்கம் உள்ள ஒரு மனிதனால் ஒரு உயிரினத்திற்கு தீங்கு செய்ய முடியாது என்று கூறினார். சுவாமி விவேகானந்தரின் குருவாக கருதப்படும் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் "பல கருத்துக்கள், பல பாதைகள் என்ற போதனையைப் பற்றியும் கிண்டலான கருத்துக்களை லீலா தாஸ் கூறினார், ''ஒவ்வொரு பாதையும் ஒரே இலக்கை நோக்கிச் செல்வதில்லை'' என்று அவர் அதை விமர்சிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
ISKCON punishes monk Amogh Lila Das for making derogatory & outrageous comments against Ramkrishna Paramhansa & Swami Vivekananda by banning him for one month. Monk Amogh Das will remain in the hills of Govardhan for one month & completely seclude himself from the public life… pic.twitter.com/hLx1AvPvqg
— Pooja Mehta (@pooja_news) July 11, 2023
துறவி அமோக் லீலா தாஸின் இந்த ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதை அடுத்து கடுமையான சர்ச்சை வெடித்தது. அதுமட்டுமின்றி அவரின் கருத்துக்கு கடுமையான எதிர்வினைகளையும் கிளப்பியது.
மேலும் படிக்க | 2 லட்சம் மதிப்பிலான "தக்காளி" அபேஸ் - வழிப்பறி கும்பல் அடாவடி
இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் குணால் கோஷ், "நாங்கள் இஸ்கானை மதிக்கிறோம். ஆனால் அவர்கள் அவரைத் தடுக்க வேண்டும். ராமகிருஷ்ணரையும் விவேகானந்தரையும் அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது. துறவி என்று அழைக்கப்படும் இவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ட்வீட் செய்துள்ளார்.
ஒரு மாத தடை
இதுகுறித்து தகுந்த நடவடிக்கைகளை எடுத்து, இஸ்கான் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் தாஸ் வெளிப்படுத்திய கருத்துக்கள் இஸ்கானின் மதிப்புகள் மற்றும் போதனைகளின் பிரதிநிதித்துவம் அல்ல என்று கூறியது. "பிற மத நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளுக்கு எந்த விதமான அவமரியாதை மற்றும் சகிப்பின்மை ஆகியவற்றை நாங்கள் கண்டிக்கிறோம்," என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 'இழிவான கருத்துக்கள்' ஆன்மீக பாதைகளின் பன்முகத்தன்மை மற்றும் தனிப்பட்ட தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வு தாஸிடம் இல்லாததைக் காட்டுகிறது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.
"அவர் செய்த இந்த கடுமையான தவறை கவனத்தில் கொண்டு, இஸ்கான் அவரை 1 மாதம் தடை செய்ய முடிவு செய்துள்ளது. நாங்கள் எங்கள் முடிவை அவரிடம் தெரிவித்துள்ளோம். அமோக லீலா தாஸ் தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்டுள்ளார், மேலும் அவர் எவ்வளவு பெரிய தவறை செய்துள்ளார் என்பதை அவர் உணர்ந்துள்ளார்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
#ISKCON took action against #Amogh Lila Das pic.twitter.com/SaNMGQFJKS
— Neha Singh (@neha_999) July 11, 2023
"அவர் கோவர்தன் மலையில் 1 மாதம் 'பிரயாச்சித்' (பரிகாரம்) செய்ய சபதம் எடுத்துள்ளார், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பொது வாழ்க்கையில் இருந்து தன்னை முழுமையாக ஒதுக்கிக்கொள்வார்" என்று அது மேலும் கூறியது.
யார் இந்த அமோக லீலா தாஸ்?
அமோக் லீலா பிரபு ஒரு ஆன்மீக பேச்சாளர் மற்றும் சமூக சேவகர் ஆவார். அவர் தற்போது இஸ்கானின் துவாரகா பிரிவின் துணைத் தலைவராக பணியாற்றுகிறார். லக்னோவில் ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த தாஸின் வயது 43. அடிப்படையில் இவர் ஒரு மென்பொருள் பொறியாளர். இவரின் உண்மையான பெயர் ஆஷிஷ் அரோரா. தனது பெயரை அமோக் லீலா தாஸ் மாற்றிக்கொண்ட அவர் தற்போது டெல்லியில் வசிக்கிறார். சிறுவயதில் இருந்தே மிகவும் மதப்பற்றுள்ள அவர், பள்ளியில் படிக்கும்போதே பகவத் கீதையின் வசனங்களைப் படித்தார்.
பகவத் கீதையின் தத்துவம் மற்றும் போதனைகளால் ஈர்க்கப்பட்ட அமோக் லீலா தாஸ், அதை பற்றி மேலும் அறிய ஆழமாக ஆராய முடிவு செய்தார். மெந்பொருள் பொறியாளராக பட்டம் பெற்ற பிறகு, தாஸ் சில காலம் மென்பொருள் துறையில் பணிபுரிந்தார், ஆனால் விரைவில் முழுநேர வேலையை விட்டுவிட்டு ஆன்மீகப் பாதையில் பயணித்தார்.
ஆன்மிகப் பயிற்சிக்காக இஸ்கானின் துவாரகா மையத்திற்குச் சென்று பிரம்மச்சரிய சபதம் எடுத்தார். அமோக் லீலா தாஸ் தன்னை ஒரு பேச்சாளர், ஆன்மீக ஆர்வலர் மற்றும் போதகர் என தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார். மேலும், இவரின் பேச்சுக்கு பல்லாயிரக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது வீடியோக்கள் மிகவும் பிரபலமாக உள்ளன மற்றும் சமூக ஊடகங்களில் அதிக கவனத்தையும் பெறுகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ