பாஜகவிற்கு சாதகமாக பணியாற்றிய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த்: மெஹ்பூபா முஃப்தி

Mehbooba Mufti on Ex-President Ram Nath Kovind: குடியரசு தலைவராக ராம் நாத் கோவிந்த் பல தவறான முன்னுதாரணங்களை விட்டுச் செல்வதாக மெஹ்பூபா முஃப்தி வெளிப்படையாக குற்றம் சாட்டுகிறார்!

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 25, 2022, 12:42 PM IST
  • குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு பலர் வாழ்த்து
  • தமிழக முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்து டிவிட்டர் செய்தி பதிவிட்டார்
  • பல தவறான முன்னுதாரணங்களை விட்டுச் செல்வதாக மெஹ்பூபா முஃப்தி குற்றச்சாட்டு
பாஜகவிற்கு சாதகமாக பணியாற்றிய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த்: மெஹ்பூபா முஃப்தி title=

புதுடெல்லி: இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக மாண்புமிகு திரௌபதி முர்மு இன்று (ஜூலை 25, 2022)  பதவியேற்றார். இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் நேற்றுடன் (2022, ஜூலை 24) முடிவடைந்த நிலையில், இன்று முதல் நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக மாண்புமிகு திரெளபதி முர்மு தனது சேவையை தொடங்கிவிட்டார். நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் முதல் பழங்குடியினப் பெண்மணி என்ற சரித்திரமும் இன்று உருவானது. இப்படி பல புதிய முன்னுதாரணங்களை இந்திய குடியரசுத் தலைவரும் நாட்டின் முதல் குடிமகளுமாக பதவியேற்றிருக்கும் மாண்புமிகு திரெளபதி முர்மு ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பதவியில் இருந்து ஓய்வு பெற்ற மாண்புமிகு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு பலரும் வாழ்த்துக்களுடன் வழியனுப்பி வருகின்றனர்.

அதில், குடியரசுத் தலைவர் பற்றி, ஒருங்கிணைந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக பணியாற்றிய மெஹ்பூபா முஃப்தி தெரிவித்துள்ள செய்தி, சற்று நெருடலாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | குடியரசுத் தலைவர் தேர்தலில் பயன்படுத்தப்படும் ‘அழிக்க’ முடியாத சிறப்பு ‘MARKER PEN’

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை குறிப்பிட்டு, பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டவர் நாட்டின் 14வது குடியரசுத் தலைவர் என்ற பொருள்படும் டிவிட்டர் பதிவை மெஹ்பூபா முஃப்தி வெளியிட்டுள்ளார்.

பதவி விலகும் குடியரசுத் தலைவர், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பலமுறை மீறியவர் என்ற ஒரு பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார் என்று தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள மெஹ்பூபா முஃப்தி, சட்டப்பிரிவு 370, சிஏஏ நீக்கப்பட்டாலும் அல்லது சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் குறிவைக்கப்பட்டது என பாஜகவின் அரசியல் நிகழ்ச்சி நிரலை அவர் நிறைவேற்றினார் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார் திரௌபதி முர்மு

இந்தியக் குடியரசுத் தலைவராக வெற்றிகரமாக தனது பணியினை நிறைவு செய்துள்ள மாண்புமிகு திரு. ராம் நாத் கோவிந்த் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தப் பதிவு அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக 2017 ஆம் ஆண்டில் ராம்நாத் கோவிந்த் பொறுப்பேற்றார். அவர் பதவியேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், புதிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று பதவியேற்றுக் கொண்டார்.

மேலும் படிக்க | President of India: குடியரசுத் தலைவர் பெறும் சம்பளம் மற்றும் இதர வசதிகள் என்ன

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News