புதுடெல்லி: கடமையில் கண்ணாயிருந்த போலீஸ்காரர் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவத்தின் வீடியோ வைரலாகிறது. காவல்துறையை சேர்ந்தவர்களுக்கே இந்த நிலைமை என்றால், பொதுமக்களின் நிலை என்ன என்ற கேள்வியை இந்த வீடியோ எழுப்புகிறது. இந்த சம்பவம் கேமராவில் பதிவாகியிருந்தது.
டெல்லியின் திலக் நகர் (Tilak Nagar) காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள் முகேஷ் பணிபுரிகிறார். முகேஷும் அவரது சகா தீபக்கும் செளகாண்டி (Chaukhandi) பகுதியில் பணியாற்றி கொண்டிருந்தபோது இந்த கத்திக் குத்து சம்பவம் நடந்துள்ளது என்று போலீசார் (Police) தெரிவித்தனர்.
போலீஸ் கான்ஸ்டபிள் தீபக்குக்கு பலத்த காயம்
புதன்கிழமை இரவு 7.30 மணியளவில், திலக் நகர் காவல் நிலைய சரகத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்த காவல்துறை இருவரை, அங்கு வந்த சாகர் என்ற நபர் தாக்கினார். சம்பவ இடத்திற்கு வந்த அந்த நபர் முகேஷை கத்தியால் தாக்கி வலது கை மற்றும் இடது அடிவயிற்றில் குத்தினார் என்று டெல்லி காவல்துறையின் கூடுதல் செய்தித் தொடர்பாளர் அனில் மிட்டல் தெரிவித்தார்.
#WATCH | A criminal attacked two police constables with a knife in Chowkhandi area of Tilak Nagar yesterday evening. A constable sustained severe injuries in hand & abdomen. The criminal also received bullet injuries in firing as he tried to snatch service pistol: Delhi Police pic.twitter.com/DlDJw5M3HJ
— ANI (@ANI) January 7, 2021
முகேஷிடம் இருந்த துப்பாக்கியையும் பறிக்க முயன்றார் சாகர். இருப்பினும், முகேஷ், தற்காப்புக்காக, வானத்தை நோக்கி துப்பாக்கியால் (Gun) சுட்டார். அப்போது, ஒரு புல்லட் தற்செயலாக சாகரைத் தாக்கியது என்றும் அனில் மிட்டல் கூறினார்.
சாகர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு (Hospital) கொண்டு செல்லப்பட்டார் மற்றும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது, மிட்டல் கூறினார். கான்ஸ்டபிள் முகேஷ் ஒரு மருத்துவமனையில் பலத்த காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
Also Read | பனியால் சூழ்ந்த இடத்தில் குடிநீருக்கான குழாய் அமைப்பது எப்படி? watch the video
சாகர் சுமார் 15 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார், கொள்ளை மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு வழக்குகள் (cases) நடைபெற்று வருகின்றன. என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR