பாக்., மக்கள் வெளியேற 48 மணி நேரம் கெடு விதித்தது ராஜஸ்தான்!

ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் மாவட்டத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேறும்படி அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்!

Last Updated : Feb 20, 2019, 08:11 AM IST
பாக்., மக்கள் வெளியேற 48 மணி நேரம் கெடு விதித்தது ராஜஸ்தான்! title=

ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் மாவட்டத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேறும்படி அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்!

ராஜஸ்தானில்,  பாக்., எல்லைக்கு மிக அருகில் உள்ள பிகானிர் மாவட்டத்தில், வர்த்தகம், தொழில் மற்றும் சிகிச்சைக்காக ஏராளமான பாகிஸ்தானியர்கள் வந்து செல்கின்றனர். 

தற்போது ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து, பிகானீர் மாவட்டத்தில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் இந்திய எல்லையை வெளியேறும்படி, அம்மாவட்ட ஆட்சியர் குமார் பால் கௌதம் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாவது... "எல்லைக்கு அருகில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள், அடுத்த 48 மணி நேரத்திற்குள் மாவட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும்.

எல்லை பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், தர்மசாலாக்கள் மற்றும் மருத்துவமனைகளில் பாகிஸ்தானியர்கள் தங்கவும் தடை விதிக்கப்படுகிறது. 

பாகிஸ்தான் நாட்டவர்களுடன் வர்த்தக ரீதியான கொடுக்கல், வாங்கலில் இந்தியர்கள் ஈடுபடக்கூடாது, அவர்களை பணியமர்த்தவும் கூடாது. இந்த தடை உத்தரவு, இரண்டு மாதங்களுக்கு அமலில் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

பிகானீர் மாவட்ட ஆணையர் அளித்த தகவலின் பேரில் அம்மாவட்டத்தில் அதிக அளவிலான பாக்கிஸ்தானியர்கள் குடியேறி இருப்பதாகவும், முறையான ஆவணங்கள் இன்றி அவர்கள் அப்பகுதியில் வியாபாரம் மேற்கொண்டு வருவதாகவும், குறிப்பாக புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் பாக்கிஸ்தானியர் புழக்கம் அதிகமாக இருப்பதாகவும் அறிந்து இந்த உத்தரவினை ஆட்சியர் பிரப்பித்துள்ளதாக தெரிகிறது. 

இதற்கிடையில் பாகிஸ்தானியர்கள் வெளியேற 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டதற்கு பாக்., வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Trending News