இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரா டி.ராஜா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர ரெட்டி அறிவித்துள்ளார்.
இடதுசாரி இயக்கங்களில் முக்கிய கட்சியாக இருப்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இந்த கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக இருப்பவர் சுதாகர் ரெட்டி. இவர் கடந்த இரண்டு முறையாக கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் தனது உடல் நிலையை காரணம் காட்டி கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வேறு ஒருவரை நியமிக்க வேண்டுமென கடந்த ஓராண்டாக மத்திய குழுக் கூட்டத்தில் தெரிவித்து வந்தார். இதன் தொடர்ச்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளராக இருப்பவரும், மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வருபருமான தமிழகத்தை சேர்ந்த டி. ராஜா அவர்களது பெயரை முன்மொழிந்தார்.
CPI General Secretary S Sudhakar Reddy: D Raja (in file pic) has been elected as the New General Secretary of Communist Party of India (CPI) pic.twitter.com/4UvGlIejZt
— ANI (@ANI) July 21, 2019
டி. ராஜா கடந்த 20 வருடங்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைமையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது.
கூட்டத்தை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக டி. ராஜா அறிவிக்கப்படுவார் என தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர ரெட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரா டி.ராஜா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.