டெல்லியில் மோசமான வானிலை: ரயில், விமான சேவை பாதிப்பு!!

Last Updated : Nov 8, 2017, 09:02 AM IST
டெல்லியில் மோசமான வானிலை: ரயில், விமான சேவை பாதிப்பு!! title=

டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்று உள்ளது, டெல்லியை ஒட்டி உள்ள ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை காணப்படுகிறது.  வட இந்தியாவில் பல்வேறு இடங்களில் இன்று காலை எழுந்த மக்களுக்கு பெரும் பனிமூட்டம் காணப்பட்டது. 

ஹரியானாவில் அதிகாலையில் நீண்ட தொலைவு செல்லும் பஸ்களின் சேவையானது ரத்து செய்யப்பட்டது. டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், ராஜஸ்தான் மாநிலங்களில் காற்று மாசுடன் பனிமூட்டம் ஏற்பட்டுள்ளது. காற்று மாசுடன் கூடிய அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர். 

மோசமான வானிலை காரணமாக இன்று டெல்லி மற்றும் அதன் ஒட்டி உள்ள அனைத்து முதன்மை பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. 

மேலும் நீண்ட தொலைவு செல்லும் ரயில்களின் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பனிமூட்டம் காரணமாக தெளிவின்மை நிலை காணப்படுவதால் ரயில்கள் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. டெல்லி விமான நிலையத்தில் 11-க்கும் மேற்பட்ட ரயில்கள் சேவையானது பாதிக்கப்பட்டு உள்ளது. 

டெல்லி விமான நிலையத்தில் விமானங்களின் சேவையானது பாதிக்கப்பட்டு உள்ளது. தெளிவான வானிலையின்மை காரணமாக விமான ஓடுதளம் மூடப்பட்டது. சில விமானங்கள் வேறு விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டன.

இதற்கிடையே டெல்லியில் மோசமான வானிலை காரணமாக பள்ளிகளுக்கு சில நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News