பாஜகவால் யார் முதல் வேட்பாளர் என அறிவிக்க முடியுமா?; அக்கட்சியை சேர்ந்த யாருடனும் விவாதத்தில் ஈடுபட தயாராக உள்ளேன் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்!!
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செவ்வாயன்று பாரதிய ஜனதா கட்சி தங்களது முதலமைச்சர் வேட்பாளரை எதிர்வரும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அறிவித்தால் அவர்களுடன் பகிரங்க விவாதத்திற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார். ஆம் ஆத்மி கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், டெல்லியில் பாஜகவின் முகம் யார் என்பதை டெல்லியில் உள்ள மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள், ஆனால் அமித் ஷா அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டிருக்கிறார்.
70 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்திற்கு வரும் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், களத்தில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது. டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மியின் சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க-ன் வேட்பாளராக இளைஞர் அணி தலைவர் சுனில் யாதவ், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணவர் அமைப்பின் டெல்லி தலைவரான ரொமேஷ் சபர்வால் ஆகியோர் போட்டியிடுவதால், அங்கு தலைவர்களின் பிரச்சாரம் களைகட்டி வரும் நிலையில், அரசியல் கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியீட்டு வருகிறது.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், பணியின் போது மரணமடையும் துப்புரவு பணியாளர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும். வீடு தேடி ரேசன் பொருட்கள், வலிமையான ஜன்லோக்பால், மூத்த குடிமக்கள் வழிபாட்டுதலங்களுக்கு செல்ல ரூ.10 லட்சம் நிதியுதவி, பெண்கள் பாதுகாப்பு, அனைவருக்கும் கல்வி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், தனிநபர் பயிற்சிக்கு சிறப்பு வகுப்புகள் துவக்கப்படும். யமுனை ஆற்றங்கரையோரம் நவீனப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
AAP #DelhiElections manifesto: We will establish 24x7 markets on a pilot basis in key commercial areas where shops, restaurants, etc. can remain open round the clock. https://t.co/pWrK8pIv4l
— ANI (@ANI) February 4, 2020
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில்... "டில்லியில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல், மக்களிடம் இருந்து 'பிளாங்க் செக்' கை அமித்ஷா கேட்கிறார். மக்களிடமிருந்து உத்தரவு வந்தது பின்னர், யார் முதல்வர் வேட்பாளர் என்பதை அறிவிப்போம் என அமித்ஷா கூறுகிறார். ஆனால், பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் யார் முதல்வர் என்பதை அறிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். படிக்காத அல்லது தகுதியில்லாத நபரை அமித்ஷா அறிவித்தால் என்ன செய்வது? அது டில்லி மக்களை ஏமாற்றுவது போல் ஆகும். பா.ஜ.க-வால், யார் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடியுமா? அக்கட்சியை சேர்ந்த யாருடனும் விவாதத்தில் ஈடுபட தயாராக உள்ளேன்" என அவர் தெரிவித்துள்ளார்.