Delhi MCD Elections 2022: டெல்லி உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம் - கெஜ்ரிவால் போட்ட திடீர் ட்வீட்!

Delhi MCD Elections 2022: டெல்லி உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களை நோக்கி அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறைகூவல் ஒன்றை விடுத்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 4, 2022, 09:38 AM IST
  • டெல்லி மூன்று உள்ளாட்சி அமைப்புகள் ஒன்றாக இணைப்பு.
  • அதன்பிறகு நடைபெறும் முதல் உள்ளாட்சி தேர்தல் இதுதான்.
  • இந்த தேர்தலில், டெல்லியின் குப்பை பிரச்னைதான் முதன்மையாக உள்ளது என கூறப்படுகிறது.
Delhi MCD Elections 2022: டெல்லி உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம் - கெஜ்ரிவால் போட்ட திடீர் ட்வீட்! title=

Delhi MCD Elections 2022: பல்வேறு கட்சிகளின் கடுமையான பிரச்சாரத்திற்குப் பிறகு, டெல்லியில் உள்ள மொத்தம் 250 மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 709 பெண்கள் உட்பட மொத்தம் 1,349 வேட்பாளர்கள் இதில் போட்டியிடுகின்றனர். இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் திருத்தச்சட்டம், 2022 மூலம் தேசிய தலைநகரின் மூன்று உள்ளாட்சி அமைப்புகள் ஒன்றாக இணைக்கப்பட்ட பிறகு, நடைபெறும் முதல் உள்ளாட்சித் தேர்தல் இதுவாகும். இதில், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக ஆம் ஆத்மி கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டது. 

ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் 250 வார்டுகளிலும் தங்களின் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. ஆனால் காங்கிரஸ் 247 வார்டுகளில் மட்டுமே தனது வேட்பாளர்களை நியமித்துள்ளது. டெல்லி உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வரும் டிசம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்படும். 

மேலும் படிக்க | ரயில்வேயின் அலட்சியத்தால் பலி ? : ரூ. 15 ஆயிரம் நிவாரணமா... - மகனை இழந்த தந்தை ஆவேசம்!

இந்நிலையில், வாக்குப்பதிவு தொடங்கும் கால் மணிநேரத்திற்கு முன், அதாவது இன்று காலை 7.45 மணியளவில், டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இந்தி மொழியில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளா். 

அதில்,"டெல்லியை சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருக்கவும், ஊழலற்ற அமைப்பை உருவாக்கவும் இன்றைய தேர்தல் உதவியாக இருக்கும். நேர்மையான மற்றும் செயல்படும் வகையிலான நிர்வாகத்தை தேர்ந்தெடுக்க இன்று உங்களின் வாக்குகளை செலுத்துங்கள் என ஒட்டுமொத்த டெல்லிவாசிகளும் கூறிகொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். 

ஆம் ஆத்மி கட்சியின் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் முகமாக செயல்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தூய்மையான மற்றும் குப்பையில்லா நகரத்திற்கு தங்களுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இதுகுறித்து மணீஷ் சிசோடியா,"காலநிலை நன்றாக இருக்கிறது. மக்கள் வரிசையில் நின்று வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தினமும் காலையில் எழுந்திருக்கும்போது, கண்முன் இருக்கும் குப்பைக் குவியல்களை விட இந்தச் சிறிய சிரமத்தை எதிர்கொள்வது நல்லதுதான்" என்று தெரிவித்துள்ளார். டெல்லியில் குப்பை

250 வார்டு கவுன்சிலர்களை தேர்வு செய்ய மொத்தம் 1.45 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்தத் தேர்தலில் குப்பை முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | டெல்லி ஷ்ரத்தா கொலை இன்ஸ்பிரேஷன்... அதே ஸ்டைலில் காதலி கொலை.. சிக்கியது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News