ஜாண்டேவலனில் பெண் தற்கொலை செய்து கொண்டதால் டெல்லி மெட்ரோ ப்ளூ லைன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன!!
டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷனின் (DMRC) ஜான்டேவலன் நிலையத்தில் திங்கள்கிழமை காலை மெட்ரோ தடங்களில் குதித்து 40 வயது பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால், டெல்லி மெட்ரோவின் ப்ளூ லைன் சேவை பாதிக்கப்பட்டுள்ளன.
ராஜ் கார்டன் மெட்ரோ நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் காலை 8.50 மணியளவில் ஜாண்டேவலனில் மெட்ரோ தடங்களில் ஒரு பெண் தவறி விழுந்ததாக PCR தகவல் தெரிவித்துள்ளது. இருப்பினும், அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைந்தபோது அந்த பெண் இறந்து கிடந்துள்ளார்.
இந்திரபிரஸ்தா மற்றும் கீர்த்தி நகர் மெட்ரோ நிலையங்களுக்கு இடையிலான சேவைகள் ஜாண்டேவலனில் தடங்களில் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக DMRC ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
Blue Line Update
Delay in services between Indraprastha and Kirti Nagar due to a passenger on track at Jhandewalan.
Normal service on all other lines.
— Delhi Metro Rail Corporation (@OfficialDMRC) September 2, 2019
ஓடும் ரயிலின் முன்னால் ரயில் தடங்களில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது. உடல் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்ட நிலையில் அந்தப் பெண் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.