Emergency AQI; முகமூடி இல்லாமல் 700 குழந்தைகள் நிகழ்ச்சியில் பங்குபெற வைத்த சம்பவம்

AQI இன் அளவு மிகவும் ஆபத்தான சூழ்நிலையை எட்டிய போது, ​​700 குழந்தைகளுக்கு முகமூடி அணிவிக்காமல் நிகழ்ச்சியில் பங்குபெற வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 14, 2019, 12:25 PM IST
Emergency AQI; முகமூடி இல்லாமல் 700 குழந்தைகள் நிகழ்ச்சியில் பங்குபெற வைத்த சம்பவம் title=

புதுடெல்லி: நாட்டின் தலைநகரான டெல்லியின் தற்போதைய காலநிலையில்திறந்த வெளியில் சுவாசிப்பது  ஆபத்தாக உள்ளது. எனவே இந்த சூழ் நிலையில் வீடுகளை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு, இந்த விஷக் காற்று உயிருக்கு ஆபத்தாக இருக்கக்கூடும் என்ற நிலையில், இன்று டெல்லி மற்றும் அதன் சுற்றுபுறம் பகுதிகளான குருகிராம், நொய்டா, பரிதாபாத் மற்றும் காஜியாபாத் போன்ற டெல்லி என்.சி.ஆரிலும் (Delhi-NCR) அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால், பள்ளியில் விடுமுறை இருந்தபோதிலும், இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், டெல்லியின் சாணக்யபுரியில் உள்ள நேரு பூங்காவிற்கு நிகழ்ச்சியில் பங்கேற்க சுமார் 700 குழந்தைகள் காலையில் அழைக்கப்பட்டனர். காற்று மாசு மூடுபனி குழந்தைகள் சூழ்ந்துள்ளது. AQI இன் அளவு மிகவும் ஆபத்தான சூழ்நிலையை எட்டிய போது, ​​700 குழந்தைகளுக்கு முகமூடி அணிவிக்காமல் நிகழ்ச்சியில் பங்குபெற வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், தேசிய தலைநகரில் புகை மூட்டம் வானத்தை மூடுவது போல அனைத்து பகுதியில் காட்யளிகிறது.

 

வட இந்தியாவில் காற்றின் தரக் குறியீட்டு (Air quality index) அளித்த தரவுகளின்படி, கான்பூர் நகரத்தில் மிக மோசமாக உள்ளது என்றும், அதன் அளவு 399 ஆக உள்ளது எனவும் கூறப்பட்டு உள்ளது.

 

டெல்லி என்.சி.ஆர் பகுதிக்குள் வரும் காசியாபாத்திலும் காற்று படுமோசமாக உள்ளது. காற்றின் தரக் குறியீட்டு (AQI) தரவுகளின்படி, இந்திரபுரம் 480, லோனி 479, சஞ்சய் நகர் 479, வசுந்தரா 489 என மோசமான பிரிவில் உள்ளன.

 

அதேபோல டெல்லியில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (Central Pollution Control Board ) தரவுகளின்படி, ஐடிஓ பகுதியில் 474 அளவில் கடுமையான காற்று மாசு உள்ளது என கூறப்பட்டு உள்ளது. ஆனால் அதை விட டெல்லி லோதி சாலை பகுதியில் 500 என்ற அளவில் காற்றின் மாசு உள்ளது. இது மிகவும் ஆபத்தான நிலையாகும். இதனால் தான் பொதுமக்கள் அதிக நேரம் வெளியில் இருக்க வேண்டாம் என்றும், மாணவ-மாணவி நலன்களை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளுக்கும் இரண்டு நாள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

 

 

 

 

Trending News