கடந்த 2016 ஆண்டு நவம்பர் மாதம் பழைய 500, 1000 ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ள கால அவகாசம் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, பழைய ரூபாய் நோட்டுகள் தன்னுடையது எனவும், டிசம்பர் 31க்குள் செலுத்துவதில் சிக்கல் இருந்தது என்பதை நிருபித்தால் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என கடுமையாக கூறினர்.
தொடர்ந்து, 2 வாரத்தில் மத்திய நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி பதிலளிக்க உத்தரவிட்டனர். பழைய ரூபாய் நோட்டுகளை டிபாசிட் செய்வதில் சிக்கல் உள்ளவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யும் என குறிப்பிடத்தக்கது.