காதலி வெளிநாடு செல்வதை தடுக்க இளைஞர் கூறிய பொய்யால் பரபரப்பு!

என்னுடைய மனைவி 'தற்கொலை படையை' சேர்ந்தவர், விமான நிலையத்தில் வெடி குண்டு வீசவுள்ளார் என கணவர் கூறியதால் பரபரப்பு!

Last Updated : Aug 17, 2019, 01:55 PM IST
காதலி வெளிநாடு செல்வதை தடுக்க இளைஞர் கூறிய பொய்யால் பரபரப்பு! title=

என்னுடைய மனைவி 'தற்கொலை படையை' சேர்ந்தவர், விமான நிலையத்தில் வெடி குண்டு வீசவுள்ளார் என கணவர் கூறியதால் பரபரப்பு!

டெல்லி காவல்துறையின் சிறப்புக் குழு ஆகஸ்ட் 8 ஆம் தேதி டெல்லி விமான நிலையத்தில் வெடிகுண்டு வீசுவதற்காக தனது மனைவி வருவதாக அழைப்பு விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளார். இதுகுயர்த்து அதிகாரிகளை அழைக்கும் போது, அந்த நபர் தனது மனைவி ஒரு "தற்கொலைப் படையினர்" என்றும், வெடிகுண்டு வெடிப்பைத் தூண்டுவதற்காக விமான நிலையத்திற்குச் செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணையில், அந்த நபர் தனது மனைவி நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதற்காக இதைச் செய்ததாக தெரிய வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் நசிருதீன் (29) புதுடெல்லியில் உள்ள பவானா பகுதியைச் சேர்ந்தவர்.

ஆகஸ்ட் 8 ஆம் தேதி அவர் அழைத்ததைத் தொடர்ந்து, புதுடெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் சர்வதேச விமானங்களின் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டியிருந்தது. அந்த நபரின் மனைவி ரஃபியா துபாய் செல்வதை தடுக்கவே தாம் அவ்வாறு கூறியதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து, நசிருதீன் மீது போலீசார் கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் சென்னையில் ஒரு பை உற்பத்தி தொழிற்சாலை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அவர் தனது ஊழியரான ரஃபியாவை மணந்தார், அவர் இப்போது இந்தியாவை விட்டு வளைகுடாவில் வேலை செய்ய திட்டமிட்டிருந்தார்.

ரஃபியாவை இந்தியாவை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்தபோது, அவர் தனது மனைவி என்றும் அவர் விமான நிலையத்தில் குண்டுவீச்சு நிகழ்த்த வந்துள்ளதாகவும் அவர் பொய்யான தகவலை கூரியுல்லாது தெரியவந்துள்ளது. 

 

Trending News