ரயிலில் எத்தனை நாளுக்கு ஒருமுறை போர்வைகள் துவைக்கப்படும் தெரியுமா? - அமைச்சரே சொல்லிய தகவல்

Indian Railways: ரயில்களில் வழங்கப்படும் பெட்ஷீட்கள், போர்வைகள், தலையணைகள் எத்தனை நாள்களுக்கு ஒருமுறை துவைக்கப்படும் என்பது குறித்து ரயில்வே துறை அமைச்சரே விளக்கமளித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Nov 28, 2024, 08:03 PM IST
  • ரயிலில் ஏசி பெட்டிகளில் போர்வைகள், பெட்ஷீட்கள் கொடுக்கப்படும்.
  • இதுகுறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
  • இதற்கு ரயில்வே துறை அமைச்சர் பதில் அளித்தார்.
ரயிலில் எத்தனை நாளுக்கு ஒருமுறை போர்வைகள் துவைக்கப்படும் தெரியுமா? - அமைச்சரே சொல்லிய தகவல் title=

Indian Railways: நாடு முழுவதும் உள்ள ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் எத்தனை நாள்களுக்கு ஒருமுறை துவைக்கப்படும் என ராஜஸ்தானை சேர்ந்த காங்கிரஸ் எம்பி குல்தீப் இந்தோரா மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார். 

இந்த கேள்விக்கு, கேள்வி - பதில் நேரத்தில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார். அப்போது பேசிய அஸ்வினி வைஷ்ணவி, "ரயில் பயணத்தில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் மாதத்திற்கு ஒருமுறையாவது நன்கு சலவை செய்யப்படும். தற்போது இந்திய ரயில்வேயில் பயன்பாட்டில் உள்ள போர்வைகள் அனைத்தும் மிகவும் மெல்லிசானவை, எளிதில் சலவை செய்யக் கூடியவை ஆகும். இது பயணிகளுக்கு குளிரை தாங்க உதவும். இதனால் பயணிகளின் பயணமும் சௌகரியமாக இருக்கும்.

பெட்ஷீட்  சலவை

அதே நேரத்தில் பயணிகளுக்கு ரயில்களை வழங்கப்படும் கதர் பெட்ஷீட்டானது, நவீன சலவை இயந்திர நிலையங்கள் மற்றும் சலவை வசதிகள் மூலம் ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பின்னரும் நன்கு சலவை செய்யப்படும்" என்றார். மேலும், இத்துடன் இந்திய ரயில்வே அதன் ரயில் பயணிகளுக்கு வழங்கும் சுத்தமான படுக்கை வசதி குறித்தும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பட்டியலிட்டார். 

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு முக்கிய அப்டேட்: மீண்டும் ரயில் டிக்கெட் கட்டணத்தில் சலுகையா?

புதிய கைத்தறி பெட்ஷீட்களை கொள்முதல் செய்வது மேம்பட்ட BIS அம்சங்களுடன் மேற்கொள்ளப்படுகிறது, அவை சிறந்த தரத்தை உறுதி செய்வதற்காக குளிரை தாங்கும் அளவிற்கு உள்ளன. சுத்தமான மற்றும் சுகாதாரமான கைத்தறி பெட்ஷீர் செட்களை வழங்குவதை உறுதி செய்ய இயந்திரமயமாக்கப்பட்ட சலவை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

வேறு நடவடிக்கைகள்

சலவை வளாகத்தில் கைத்தறி சலவை நடவடிக்கைகளை ரயில்வே ஊழியர்கள் சிசிடிவி மூலம் கண்காணிப்புகளை மேற்கொள்கின்றனர். சலவை செய்யப்பட்ட கைத்தறி பெட்ஷீட்களின் தரத்தை சரிபார்க்க வைட்டோ-மீட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. புதிய கைத்தறி பொருட்களை வாங்குவதை ஊக்கவிக்க, ஒரு பெட்ஷீட்டின் பயன்பாட்டு காலத்தை தற்போது குறைத்திருக்கிறோம். 

மேலும் இதுபோன்ற படுக்கை மற்றும் பெட்ஷீட் வசதிகள் குறித்து எழும் புகார்களுக்கு ஒவ்வொரு மண்டலத்தின் தலைமையிடத்திலும், ஒவ்வொரு கோட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு இணையதளம் மூலம் வரும் புகார்களை பெறுவதையும், அதனை சரிசெய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்" என்றார். 

ரயிலில் ஏசி பெட்டிகளில் பயணிகளுக்கு பெட்ஷீட்கள், தலையணைகள், கம்பிளிகள் அனைத்தும் பழுப்பு நிற உறையில் வைத்து வழங்கப்படும். இதில் பெட்ஷீட்கள் மற்றும் தலையணைகள் வெள்ளை நிறத்தில் இருப்பதால் பெரும்பாலும் சுகாதாரமாக இருக்கும். அதேநேரத்தில் பயணிகளுக்கு வழங்கப்படும் கம்பிளிகளில் கருப்பு அடர்ந்திருக்கும் என்பதால் அதன் சுகாதாரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது இதுகுறித்து மக்களவையில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவே விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | தட்கலில் டிக்கெட் புக் பண்றீங்களா... இந்த விஷயங்களை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News