டெல்லியில் உள்ள லாலு பிரசாத் மகள் மிசா பார்தி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

Last Updated : Jul 8, 2017, 12:10 PM IST
டெல்லியில் உள்ள லாலு பிரசாத் மகள் மிசா பார்தி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை title=

பீகார் மாநில முன்னால் முதல்வரும், முன்னால் ரயில்வே அமைச்சரும் ஆனா லாலு பிரசாத் யாதவின் வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் என மொத்தம் 12 இடங்களில் நேற்று வருமான வரித்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அடுத்த கட்டமாக, இன்று லாலு பிரசாத் யாதவ் மகள் மிசா பார்தி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. டெல்லியில் உள்ள மிசா பார்தியின் பண்ணை வீடு உட்பட அவருக்கு சொந்தமான 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

லாலு பிரசாத் ரெயில்வே மந்திரியாக பதவி வகித்த போது ரெயில்வேக்கு சொந்தமாக புரி மற்றும் ராஞ்சியில் இருந்த 2 ஓட்டல்கள் தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டது. அப்பொழுது பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக தெரிகிறது.

இதனால், நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இன்று அமலாக்கத்துறை லாலு பிரசாத் யாதவ் மகள் மிசா பார்தி வீட்டில் சோதனை நடத்தி வருகிறது.

Trending News